பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும் இனிதினிதாய் எழுந்த உயர் எண்ண மெல்லாம் இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை." சகமக்கள் ஒன்றென உணர்வதுதான் உயர் எண்ணம். 'உலகம் முழுவதும்- நோக்கின் ஒருடம் பேயாம் அலகில் சீவரெல்லாம் - அதன் அவயவங்களேயாம்' என்பர் கவிமணி தேசிக விநாயகம். உலகம் உடம்பு. உலக மக்களோ அவ்வுடலின் உறுப்புகள். உறுப்புகள் ஒன்று பட்டால்தான் உடலியங்கும். அது போலவே உலக மக்களின் ஒன்றுபட்ட இயக்கமே உலக இயக்கமாகும். கடுகு உள்ளம், துவரையுள்ளம், தொன்னேயுள்ளம், மாம்பிஞ்சுள்ளம், தாயுள்ளம் என உள்ளத்தில் பல படி நிலைகளைப் பாவேந்தர் காட்டுகிரு.ர். சிறியது, பெரியது என்பதைக் குறிக்கப் பொருள்களைக் காட்டுவது தமிழ் மரபு. தினத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர், பயன் தெரிவார்' என்பது திருக்குறள். சிறியது, பெரியது என்பதைக் குறிக்கத் தினை, பனை இங்கே கூறப்பட்டுள்ளது. இம்முறையில்தான் பாவேந்தரும், சிறியது, பெரியதைக் குறிப்பிடக் கடுகு, துவரை போன்ற வற்றைக் காட்டுகிரு.ர். 'தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு' சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! கன்னலடா என் சிற்றுார் என்போன் உள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம் தொன்னேயுள்ளம் ஒன்றுண்டு தனது காட்டுச் சுதந்திரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்: ஆயுதங்கள் பரிகரிப்பார்! அமைதி காப்பார்;