பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அவரவர் தம் வீடு நகர் நாடு காக்க வாயடியும், கையடியும் வளரச் செய்வார். மாம்பிஞ்சு உள்ளத்தின் பயனும் கண்டோம்! தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே! உலக மக்களெலாம் ஒருவரே எனும் எண்ணம் தாய்மை உள்ளத்தில்தான் தோன்றும் என்கிரு.ர். தாயுள்ளம் தன்னலத்தைத் துறந்தது; ஆதலின் அதுவே அன்பு உள்ளம், பெரிய உள்ளமாகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாமே உலக நோக்கத்தை உட்கொண்டவையே எனப் பாரதிதாசன் குறிப்பிடுகிரு.ர். "வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்ருர் பாரதியார்; பாவேந்தர், முழங்கிடு கின்றதே அறம் முட்டுப்படும் உலகே, இன வேற்றுமை பட்டுக்கெடும் உலகே, நம் திருக்குறள் (முழங்)' எனத் திருக்குறள் அறத்தை முழங்குவதாகக் கூறுகிரு.ர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கின்ற தெய்வ நிலையை அடைய வழிகாட்டும் திருக்குறளோ, மனத்துக் கண் மாசிலாகை வாழ்வதே அறம்' என்கிறது. மன மாசற்ற தன்மை மக்களிடையே நேரிடின் உலகம் ஒன்றெனும் எண்ணம் தழைப்பது உறுதியன்ருே? அதைத் தான் பாரதிதாசனரும், தூய் எண்ண்ம்-இங்குத் "தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்" என்பார் .