பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூல்ோர் தொகுத்த வற்றுளெல்லாம். தலை' என்கின்ற திருக்குறட் கருத்தை விடச் சிறந்த உலக சிந்தனை வேறென்ன இருக்கிறது! ஆகவே பாரதியார் கூறுகிருர்: - வள்ளுவளுர் இப்பெரிய வையத்தைக் காப்பதற்கோர் தெள்ளுதமிழ்ப் பாட்டும் செப்பினர்-அஃது 1 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தல திருவள்ளுவர் மட்டுமன்று; நம் புலவர்கள் அனைவரும் உலகப் பொன்னிலக்கியம் படைத்தவர்கள் தான். தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை கடலிலும் வானிலும் கவினுறு நிலத்திலும் வாழ்வுயிர் அனைத்தும் மக்கட் கூட்டமும் வாழுமாறு - அன்புமணிக் குடையின் கீழ் உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர். புலவர்கள் உலகப் பொன்னிலக்கியம் ஆக்கிளுர் மறவரோ அறிவு - அறியாமையைத் தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக் கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும் அறம்புரிந்து இன்ப அருவி ஆடினர்' . . இவ்வாறு பண்டையத் தமிழர்கள் உலக நலங்கருதி நாட்டை ஆண்டும், இலக்கியம் படைத்தும் வாழ்ந்தனர். தமிழே வையகம் உய்வதற்காக எழுந்த மொழிதான் எனப் பேசுகிருர் பாவேந்தர். வையகமே உய்யு மாறு - வாய்த்த தமிழ் என் அரும் பேறு!" கவிஞர் பாரதிதாசன் இவ்வாருக உலகை நினைந்து, உலக நேயம் வளர்வதற்காக, உலகளாவிய பார்வையுடன் பாடியுள்ள பாக்கள் பற்பலவாம்.