பக்கம்:பாற்கடல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

97


புதரிலோ, அடர்த்தி நடுவில் பறவைக் கூடுபோல் கிடைக்கும் ஒதுக்கிடம் - இதுபோல் மறைவு தேடியாக வேண்டும். முதலில் கஞ்சா சம்பாதிக்கணும். அவர் ஊர் ஊராய்த் திரிந்ததே கஞ்சா வேட்டையில்தானோ என்னவோ?

பொறுத்துப் பார்த்து, இது தேறாத கேஸ் என்று தெளிந்ததும், சகோதரர்கள் கழற்றிவிட்டனர். அரசப் பழக்கத்துடன் ஆண்டிப் பிழைப்பு தீவிரமாயிற்று. வீட்டுக்கு வந்தால், சாப்பாட்டோடு சாப்பாடு; தனியாகப் பண்ணிப் போடுவது என்ன தட்டுக் கெட்டுப்போகிறது? அந்த நாளிலேயே இல்லாதவருக்கும் இருக்கப்பட்டவருக்கும் வித்தியாசம் அளவில்தான். வகையில் அல்ல. அனேகமாக எல்லார் வீட்டிலும் பானை நிறையச் சோறு. சட்டி நிறையக் குழம்பு, (ஆம், மண்பாண்டச் சமையல்தான். இப்போது அதற்கு ஓட்டல்களில் தனி விளம்பரம். தனிக்கட்டணம் கூடவோ என்னவோ) சட்டி நிறையக் கீரை, ஒருவேளை சுட்ட அப்பளாம், மூலையில் பழையது. வகைவகையாகப் பண்ணிப் போடவும் தெரியாது. வகைகளும் வழக்கில் இல்லை.

ஐயா யாத்திரையில் சொல்லாமல் கிளம்பும்போது வயிற்றில் பூச்சியை வாங்கிக் கொண்டு, திரும்பி வரும் போது 'குழந்தையைப் பார்த்தேளா? என்று ரவிவர்மா படத்தில் மேனகை போல் ஏந்திக்கொண்டு அவரும் ரிஷி போல் ஒரு கையால் கண்ணை மூடிக்கொண்டு, மறுகையால் தள்ளிக்கொண்டு. (அந்தப் 'போஸ்' கொடுக்கவில்லை. ஆனால் காட்டிய அக்கறை அவ்வளவுதான்) ஸ்ரீமதிக்குத்தான் அந்த வாழ்க்கை அலுத்துவிட்டதோ, இல்லை, அங்குதான் இனி அவளுக்கு மதிப்பு இல்லையோ - ஒருநாள், ராமசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/103&oldid=1533380" இலிருந்து மீள்விக்கப்பட்டது