பக்கம்:பாற்கடல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

ந்த வரலாற்றின் எழுத்து வாகில் ஒரு பாத்திரம் நுழைந்தது. அதைப்பற்றிச் சொல்கையில் வெளிப்படும் விசேஷ நற்குணங்களில் எனக்குத் தனிச் சந்தோஷமே உண்டு. ஆனால் தோற்றத்தை விவரிக்கையில், ’இடுப்பு குழம்புக் கற்சட்டிபோல்’ என்கிற உவமை தோன்றியதும் -

உவமையின் பொருத்தம் பற்றி எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், மனம் ஏனோ இச்சமயம் தயக்கமுற்றது. அந்த ஆசாமி இதைப் படிக்க நேர்ந்து, தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்போதும் - கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது - அந்த மனம் என்ன புண்படும்! அதுதான் என் நோக்கமா? கலையின் லட்சியங்கள்தாம் என்ன ? இந்தப் பாத்திரம் இந்த இடத்தில் அவசியந்தானா? எப்படியேனும் சாதக விசேஷத்தால், பாத்திரத்தை இங்கு இணைத்துவிடலாம். ஆனால் எம்மட்டில் அது கலையாகும்? ஓர் உண்மையான கலா சிருஷ்டியில், அதை உற்பவிப்பவனுக்கே எந்தமட்டில் சொந்தம் உண்டு? கலையென்பதுதான் என்ன?

இக்கேள்விகளை (கேள்விகள் இதோடு முடிந்துவிடவில்லை. ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன்) ஒட்டித் தொடர்ந்த சிந்தனைகளை இங்கு பரிமாற விரும்புகிறேன்.

"ஆச்சு, கதையை விட்டுவிட்டு வகுப்பு நடத்த ஆரம்பிச்சாச்சா?” என்கிற அலுப்பு முறை அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/117&oldid=1533969" இலிருந்து மீள்விக்கப்பட்டது