பக்கம்:பாற்கடல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

149


hook உயிர் பெற்று படத்திலிருந்து தாவி அவள் அவயவங்களில் எங்கு விழுமோ? எங்கு விழுந்தால் என்ன ? விழுந்த இடம் ஐயோடி! புளகாங்கிதம்தான்.

“What would you have? Stravonsky or Saturday Night fever? காஸெட்டுகளை வேகமாகப் புரட்டினான். மறுகையில் கண்ணாடித் தம்ளரில் இரண்டு ஐஸ் கட்டிகள், வாயில் சிகரெட், பேச்சில் உதடுகளின் அசைவுக்கேற்ப, மேலும் கீழும் குதித்தது சிகரெட் புகை, அவன் கண்களில் தெரிந்த புவனச் சலிப்புக்கு வளைபடி கட்டிற்று.

“Oh anything you say, But first come here Ganontust விலிருந்து லைலா முனகினாள். அந்தச் சொக்காயும் பைஜாமாக்களும் கண்ணாடியிலேயே நெயதனவா? இல்லாவிடில் வேறு என்ன material? அவளுக்குச் சற்று புத்தி தெளிந்திருந்தால், அவள் இப்போது சோபாவின் ஒரு கை மேல் ஒரு காலை உதைத்துக்கொண்டு சாய்ந்திருந்த நிலையிலிருந்து அவள் கூடக் கொஞ்சம் அடக்கம் காட்டியிருப்பாள்.

பளபளப்பான டைனிங் மேசை மேல், தலைகீழ்ப் பிம்பம் பளபளப்பு அடித்த சீனா மண் காப்பிக் கலர் கிண்ணத்தில், ஐந்து ஆப்பிள்கள் மனோகரமான லஜ்ஜையில் வெட்கித்துக் கொண்டிருந்தன. அந்தக் கன்னச்சிவப்பு 'கடி கடி' என்று அழைத்தது. ஆனால் அவை வெறும் ஆசை காட்டத்தானா ? அல்லது அவற்றை அடுக்கியிருக்கும் அழகைப் பார்ப்பவன் வியக்கவா? வீட்டு எசமானியைத்தான் கேட்க வேணும். ஆனால் அவளை மட்டும் எப்படிக் கேட்பது? கேட்பவன் தன் பட்டிக்காட்டுத் தனத்தையோ பரதைத் தனத்தையோ அம்பலமாக்காமல்...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/155&oldid=1534065" இலிருந்து மீள்விக்கப்பட்டது