பக்கம்:பாற்கடல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

167


அவசியமா எங்களுக்குச் சுற்றம் வேண்டும். சுற்றமில்லாமல் எங்களுக்குச் சரிப்படாது. எது எப்படி இருந்தால் என்ன?” அம்மா புன்னகை புரிந்தாள். “தருமத்துக்குப் போட்டாளோ? பிரியத்தில் போட்டாளோ? நாலுபேர் வீட்டு நாலுவிதச் சாப்பாடு சாப்பிட்டு, அந்த ஊட்டம் என்னை இன்னும் தாங்கிண்டுதாணிருக்கு. சோனா ஆயிரம் சௌக்யம் சேர்த்துண்டு என்ன, இன்னும் சோனாதான். அவளும் இரண்டு பெத்தப்புறம்கூட, மன்னி இன்னமும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறாள்; 'மறக்காமல் வாரத்தில் ரெண்டுமுறை எண்ணெய் தேய்க்கறாயா? இங்கு வந்தாலும், 'அம்மாப் பெண்ணே! வாரம் ரெண்டு முறை எண்ணெய் தேச்சுக்கோன்னு சொல்றா. சொல்லிட்டால் நாங்கள் தேச்சுக்க முடிகிறதா ? கை ஒழியணும்; தூக்குச்சொம்பில் வெள்ளிக்கிழமையன்னிக்கு எண்ணெய் இருக்கணும்.

முதல் நாள் வதக்கல் கறி பண்ணினால், அதோடு அந்த வெள்ளிக்கிழமை எண்ணெய்க்குளியல் போச்சு. இல்லாத அன்னிலிருந்து இன்னிவரை இதுதான் குடும்பம்! தட்டுமுட்டு முன்னே பின்னே! ஆனால் என்னிக்குமே உண்டு. எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இல்லைப் பாட்டுப் பாடினால் பாடிண்டேயிரு. இருக்கு இருக்குன்னு சொல்லிண்டிருந்தால், இன்னிக்கில்லாவிட்டால் நாளைக்கேனும் - சுண்ணாம்பாலே சூட்சுமம், ரஹஸ்யம் வெளிச்சம் எல்லாமே இதுதான்!”

தன் இளமைப் பருவத்தின் சோதனைகள் பற்றி அண்ணா மாதிரி, அம்மா அதிகம் பாட்டமாகப் பாடினமாதிரி எனக்கு ஞாபகமில்லை. நான் தனியாகச் சொல்ல என்ன இருக்கு? உங்கள் அண்ணாதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/173&oldid=1534276" இலிருந்து மீள்விக்கப்பட்டது