பக்கம்:பாற்கடல்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

லா. ச. ராமாமிருதம்


கனமாக ஜியோமதியின் சுத்தத்துடன், திடீரென்று ஸர்ப்பம் கடித்துவிட்டது. ‘சுரீல்’ - உண்மை சுடும் என்பார்கள். இந்தக் கோட்டில், இதுவரை நான் ஸுபாவிடம் பழக்கப் படாத ஒரு புதுத் துணிச்சல், அரூபம் ஒரு புது விழிப்பு இது என் கண்களுக்குச் சதை உரிப்பா அல்லது ஸுபாவின் சட்டை உரிப்பா?

அடுத்து மே இதழில் வெளிவந்த பகுதியில், மதுரை மாநகரின் எழிலை, நான் ஒரு மாதமாக உருவகப்படுத்தியிருந்ததை அவர் காட்டியிருந்ததைக் கண்டவுடன் குலுங்கிப் போனேன். கோபுரம் பின்னணியில் ஓங்க, ஸ்திரீயை இடுப்பில் குடத்துடன், நான் விவரித்திருந்தபடியே தீட்டியிருந்தார். அம்பாளே, மாறுவேடத்தில் நகர் சோதனைக்குக் கோவிலினின்று புறப்பட்டு விட்டாற்போல் இருந்தது.

சமீபத்தில் மறுபடியும் என்னை நெஞ்சை உருக்கியது, அவர் சித்திரத்தில் வடித்திருந்த என் தாயாரின் சிந்தனைப் போஸ் - உதட்டின்மேல் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பொத்திக்கொண்டு.

நானும் இப்போதெல்லாம் சுருக்க உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறேன் என்கிறது ஒரு பக்கமிருக்க, ஸுபா, நீங்களும் ஒரு ‘அஸாமி’ ஆகிவிட்டீர்கள்; பரஸ்பரப் பாராட்டுச் சங்கம் என்று ஏளனம் செய்பவர் செய்யட்டும். ஸுபா என்னைவிட 10, 15 வயதேனும் சிறியவர். ஆனால் சிறியோரெல்லாம் சிறியோரல்லர்.

பெரியோரைப் புகழ்வோம்.

நான் பிறந்து அங்கு வளர்ந்தவரை ஞாபக சக்தி எம்மட்டு, பெங்களூர் நினைவுகளை எட்டுகிறது? ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/228&oldid=1534330" இலிருந்து மீள்விக்கப்பட்டது