பக்கம்:பாற்கடல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

225


அண்ணா பதில் சொல்கிறார். இருவரும் என்னவோ பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.

ண்ணாவும் அம்மாவும் கூடத்தில் நிற்கிறார்கள். ஏதோ உணர்ச்சிவசத்தில், நான் அங்கு இருப்பதைக்கூட மறந்து அம்மா அண்ணாவின் கையைப் பற்றுகிறாள். ”ஒண்ணும் கவலைப்படாதீர்கள். பெருந்திரு கைவிட மாட்டாள். தாராமல் இருப்பாளோ, அவள் என்ன சத்தியம் மறந்தவளோ? - பாடுகிறாள்.

வேலுசாமி வாத்தியார் அண்ணாவின் சஹ டீச்சர், நண்பர்; அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவர் வந்தாலே அம்மாவுக்கு முகம் சுண்டும். அண்ணாவுடன் சேர்ந்தே பள்ளிக்குக் கிளம்புவார். சில சமயங்கள் அண்ணாவுடன் சாப்பிட உட்கார்ந்துவிடுவார். முனகிக் கொண்டே அம்மா, அவர் இலையை எடுத்து எறிந்து விட்டுப் பல முறை சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்வாள். அவர் உட்கார்ந்த இடத்தில் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வாள். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் சண்டை. அம்மாவின் ஆத்திரத்தைக் கண்டு அண்ணா போக்கடாத்தனமாகச் சிரிப்பார், நாக்கைக் கன்னத்துள் துழாவிக்கொண்டு.

”என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? நான் 'வா’ என்று அழைக்கவில்லை. வந்த ஆளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள முடியுமா? பயந்தால் என்ன செய்கிறது? இதற்கெல்லாம் தப்பிப் பிழைச்சு வந்தால்தான் பிள்ளை ?”

”இதோ பாருங்கள், அவன் பண்றதை?”

நான் வேலுசாமி ஸார் போலவே விரல்களை மடக்கிக் கொண்டு, மூக்கைச் சொரிந்துகொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/231&oldid=1534334" இலிருந்து மீள்விக்கப்பட்டது