பக்கம்:பாற்கடல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

லா. ச. ராமாமிருதம்


அம்மா முதுகில் ரெண்டு வைக்கிறாள். பலமான அறைகள்தான்.

ணிகள், கண்ணாடிக் குழல்கள் துணியில் தைக்கக் கற்றுக் கொடுக்கும் டீச்சரம்மா, கூந்தல் பொடி வங்கியில் எப்பவும் பரட்டையாகவே இருக்கிறது. மாமி வற்றல் காய்ச்சியாக, காய்ந்த ரொட்டிபோல் ஒட்டி உலர்ந்து...

அப்புறம், பாகீரதி மாமி என்று ஒரு பேரும் ஆளும் நினைவில் தட்டுப்படுகின்றன. எப்பவும் சிரித்த முகம். அடிக்கடி என்னைத் தூக்கி வைத்துக்கொள்வாள். பின்னால் தெரிய வந்தது. அவளுக்குக் குழந்தையில்லை. ஆத்துக்காரரும் வயணமில்லையாம். ரொம்ப சிரமம். அம்மா தன்னால் இயன்ற உதவி குழம்பு, ரசம், மிஞ்சிப் போன பழையதுகூட மாமி வாங்கிக் கொள்வாள் போலிருக்கிறது.

நாங்கள் குடியிருந்த இடம், விவரங்களுடன் எழுகின்றது. எங்கள் வாசற்கதவைத் திறந்தவுடனேயே கூடம். அடுத்து இரண்டு படிகள் கீழ் இறங்கிப் பள்ள மட்டத்தில் சமையலறை, உடனே இரண்டு படிகள் ஏறிக் கூடத்துக்கு நேர் எதிரில், அதேசமத்தில் அறை. அதில்தான் பெட்டி, படுக்கை வேறு கனவாரியான சாமான்கள் இருக்கின்றன.

கூடத்தில், இரு சிறார்கள் ஒரு பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அம்மா அடுப்பங்கரையில் வேலையாக இருக்கிறாள். குழந்தை எங்கள் பராக்குக்கு மசிவதாக இல்லை. அழுகிறாள். அப்பா, என்ன உரத்த குரல் ! காதைப் பொளிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/232&oldid=1534335" இலிருந்து மீள்விக்கப்பட்டது