பக்கம்:பாற்கடல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

லா. ச. ராமாமிருதம்


எழுத்து ஓர் அற்புதமான குழல் வாத்தியம். பிரான ஆஹுதியை அதனுள் செலுத்தியதும் அந்த ஆஹுதி வெளிப்படும் உருவத்தில் என்ன என்ன நாதங்கள்!

எழுத்து ஒரு அராபியக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டால், அப்பப்பா ! என்னென்ன வேகங்கள், அழகுகள் தொடுவானமும் தாண்டிய தூரங்கள் ! கொடுத்து வைத்தால், I am the Horseman in the sky! I am riding Pegasus (கிரேக்க இதிகாசத்தில் வரும் சிறகு முளைத்த தெய்வீகக் குதிரை!) எழுத்தும் விஷயமும் ஒன்றுக்கொன்று போஷாக்கு ஒருநாள், என்றேனும் ஒருநாள் என் மட்டிலேனும் எழுத்துக்கும் செயலுக்கும் இடைக்கோடு அழிந்து, எழுத்தே செயல், செயலே எழுத்து - ஜெய் பவானி! உனக்கும் இடைக்கோடு அழிந்து உன் வெள்ளத்தில் என்னை அடித்துக்கொண்டு போய்விடு - 'சொல்லே மந்திரமடா !' சும்மாவா சொன்னான் மீசைக்காரன் !

என்ன சொல்ல வந்தேன்! என்ன சொல்ல வந்தால் என்ன? விடு. இதோ ஒரு மூர்ச்சம் ககன சவாரி போய் வந்தேன். வந்தோம் என்று சொல்வது உன்னைப் பொறுத்தது.

இந்த வரலாறு போகும் பாணி முழுக்கவும் என் வசத்தில் இல்லை. பல இடங்களில் அது என்னைத் தன் வழியில் இழுத்துக்கொண்டு போகிறது. அந்த இடங்களைப் படிக்கும்போதே அவற்றின் தனி இனத்தைக் கண்டுகொள்ளலாம். அது போகும் வழி அதற்குத் தெரியும்.

இது கதையாயிருப்பின் பாயின்டாகச் சொல்லலாம். இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/244&oldid=1533334" இலிருந்து மீள்விக்கப்பட்டது