பக்கம்:பாற்கடல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

லா. ச. ராமாமிருதம்


தவிர, முற்றும் திருத்த முடியாது. சமயமில்லாத சமயத்தில் தலையை நீட்டுவான், அடாதன செய்வான் ஆனால் அவனை நாம் மன்னித்து விடுவோம். ஆனால் நம் மன்னிப்பு அவனுக்கு அக்கறை இல்லை.

ஒரு பிரபல எழுத்தாளர் என் பிள்ளையைக் கேட்டாராம்.

”பாற்கடலைப் படித்துக்கொண்டு வருகிறேன். அப்பாவுக்குத் தான் எழுத்தாளனாகப் போவது, தன் சுயசரிதை எழுதப்போவது எல்லாம் முன்னாலேயே தெரியுமா ? அப்பவே திட்டமிட்டுவிட்ட மாதிரி இளமை நினைவுகள் அவ்வளவு சுத்தமாக, தெளிவாக, அடுக்காக வருகின்றனவே எப்படி?” கேள்வி புத்திசாலித்தனமானது என்று தெரிந்ததே தவிர, அதன் ஸாரம் (Substance), நோக்கம் முழுமையாக உடனே புரியவில்லை. யோசித்து, என் ஞாபகசக்தி சாக்ஷிக்கூண்டில் ஏற்றப்படுகிறது என நானே முடிவு செய்துகொண்டு உரிய பதிலை என்னால் இயன்றவரையில் அளிக்கிறேன்.

மேலே போகுமுன் ஒரு வார்த்தை, இப்போதெல்லாம் இந்தக் கேள்வி பதில் ஸிஸ்டத்துக்கு மவுஸ் அதிகமாகி இருக்கிறது. பத்திரிகைகளிலிருந்து மேடை வரை பரவி இருக்கிறது. இது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூட தைரியமாகச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில் இந்தக் கேள்வி பதில் முறையினால் சந்தேகத்தைப் பூரா தெளிவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. கேள்விக்குப் பதில், இன்னொரு கேள்வியைப் பயக்கின்றது.

உடனே அதற்கு ஒரு பதில் - இப்படிச் சங்கிலி போட்டுக்கொண்டே போய், விஷயம் தண்டவாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/252&oldid=1533343" இலிருந்து மீள்விக்கப்பட்டது