பக்கம்:பாற்கடல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

லா. ச. ராமாமிருதம்


இதைத்தான் நான் வாஸனை என்கிறேன்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே. பாரதி சொல்வது மட்டும் என்ன?

அவர்கள் விந்தையில் ஆயிரம் எண்ணங்கள், ஆசைகள் எவர், யாவர் என்று விளக்கியும் கூற வேண்டுமா?

நான், நான் மட்டுமல்ல, என் குடும்பச் செருக்கு. அதுவும் எனக்குச் சொந்தமல்ல.

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பிலா நகை, அதை நான் அணிந்ததால், அது என்னை ஆண்டு, நான் வாழ்ந்தபின், என் பின்னோருக்கு விட்டுச் செல்லும் சாஸனம். இது நான் கண்ட அமுதம்.

பாற்கடலை நீயும் நானும் கடைந்தோம்.
எனக்காக நீ, உனக்காக நான், எனக்காக நான்.
நமக்காக நாம்.
கடைந்தோம்.
அமுதம் வந்தது.
நான் கலசமானேன்.
என் கரண்டி என் பேனா,
நான் பரிமாறுகிறேன்.
உண். இனி நாம் தேவர்.
—இதை நான் வாஸனை என்கிறேன்.
நான் என் தாத்தாவின் பேரன்
என் அப்பன் மகன்
என் தாய் வயிற்றில் தோன்ற
பாக்கியம் செய்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/62&oldid=1532506" இலிருந்து மீள்விக்கப்பட்டது