பக்கம்:பாற்கடல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

61


தாமே! மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டால் நட்சத்திர வெளிச்சம் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

சுருக்கப் போய்விடலாம் என்று எண்ணி, படிந்த பாதையை விட்டுக் குறுக்கே எங்கோ புகுந்திருக்கிறார். அப்படி, இப்படி, இரண்டு திருப்பத்தில், வழியும் தப்பிப்போச்சு, சிறிதுநேரம் நடந்தபின் ஒரு பெரிய சப்பாத்திக்கள்ளி, வழி விடாமல் குறுக்கே நிற்கிறது. இனி செய்ய என்ன?

“பெருந்திருவே கறுப்பண்ணா!”

இந்தக் குடும்பத்தில் நாபிக்கொடி வீறல் அது ஒன்றுதான்.

”ஆதிமூலமே!” யானையின் அலறல்.

"ஹே, ஹ்ருதய கமலவாஸா!"அதுவரை இடுப்பில் நுனியைப் பிடித்துக்கொண்டிருந்த கைகள் தலைக்கு மேல் தூக்கிவிட்ட நேரம். அவனும் அதற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறான்! அது என்ன ருசியோ?

The Lord is my Shepherd I shall not want.

‘RUSTOM!‘ ரஸ்டமின் வீரமுத்திரை கர்ஜனை

“பெருந்திருவே கறுப்பண்ணா!"

இந்தக் குடும்பத்தின் டங்கார த்வனியும் அதுதான்.

தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளி தோன்றிற்று. நெருங்கி வந்ததும் அந்த ஆள் கை லாந்தரை அப்பா முகத்தெதிரே பிடித்தான்.

“யாரது? இந்த நிசியில் நடுக் காட்டில்?”

தலையில் முண்டாசு, பரந்த நெற்றியில் பட்டையாக உதிரி விபூதிமேல் குறுக்கே தீட்டிய குங்குமம், குத்துமீசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/67&oldid=1533296" இலிருந்து மீள்விக்கப்பட்டது