பக்கம்:பாற்கடல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

83


இது இன்னும் முற்றுப்பெறாத வாக்கியம்தான்.

ஏனெனில் இது என்றும் முற்றுப்பெறாத எண்ணம்.

இந்த ஆசை ஒரு பேராசை, பேராசை என்பதனாலேயே ஒருவேளை, துராசைகூட.

இதில் ஒரு அமானுஷ்யம், நேரில் பார்த்தாலும், அல்ல - நிரூபணங்கள் இருந்தாலும், நம்பமுடியாத தன்மை இருக்கிறது.

இந்த சாதனா வீரர்களில் —

சங்கரர், பாரதி, பரமஹம்ஸர், விவேகானந்தர், காந்தி. பாரதி வாழ்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே இவன்போல் ஒரு பிறப்பு உண்டா எனும் அதிசயிப்பில் இதிஹாச உலகில் புகுந்துவிடுகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாய் மாறிவிடுகிறார்கள்.

சுந்தரகாண்டம் கேட்கிறோம், அல்லது படிக்கிறோம். வால்மீகியையா நிமிஷத்துக்கு நிமிஷம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நாம் வேண்டுவது அனுமத் பலம். பெருந்திருவை தரிசிக்கிறேன். ஸ்தபதியை நினைக்கிறேனா? எழுத்து பாராயணத் தோடு கலந்துவிடல் வேண்டும்.

இதில் விசுவப் பிரேமையிருக்கிறது. "என் அஸ்தியை வயல்களில் தூவிவிடுங்கள்"—நேரு)

இதில் ஒரு ஸ்வாயாகாரம் இருக்கிறது. பிரளய காலத்தில் சிவனின் புன்னகை இதில் அரும்பு கட்டுகிறது.

பூமியின் மண்ணோடு, ஜீவனுக்கு எருவாகிவிடும் எழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/89&oldid=1533362" இலிருந்து மீள்விக்கப்பட்டது