பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி . . . 35

கொட்டகைக்கு இடம் மாறின. வெற்றிலேப் பையும், வறுவல் டப்பாவும், எண்ணெய்க் குப்பியும், செம்பும், மரஜோடும், விசிறியும் நார்க் கட்டிலும், விறகு அறைக்கு வந்தன. *:

சிறு வயதிலிருந்தே மாட்டுப் பைத்தியம் கிழவருக்கு இடமாற் றம் அதற்கு மேலும் சுருதி கூட்டிற்று. அன்பையும், அரவணைப் பையும், ரத்தபாசத்தையும் தொழுவத்திலேயே கண்டு ஆனந்தக் களிப்பில் அழுந்திப்போளுர் கிழவர்.

தொழுவத்தில் சலசலப்புக் கேட்டுக்கொண்டிருந்தது. இரவில் கண் விழிக்கும்போதெல்லாம், மாடுகளின் கால் அரவம், சிறுநீர் கழிக்கும் சுள்...ர்...tர். வைக்கோல் பிடுங்கும் சரசரப்பு, கன்றின் கழுத்து மணி னிங், ணரிங்-இத்யாதி ஓசைகள் கேட்டவண்ணம் தான் இருக்கும். கிழவருக்கு இந்தப் பின்னணி யோசை பழக்கப் பட்டுவிட்டது. - - .

ஆளுல் அன்று விடிவெள்ளிப் பொழுதில் ஏதோ அசாதார்ன மான சூழ்நில தொழுவத்தில் உருவாகி வருவதாக உணர்ந்தார் கிழவர். கண் மூடியபடியே கட்டிலில் உட்கார்ந்து, எழுந்து நின்று இரவில் போர்வையாக மாறியிருந்த வேஸ் டியை இடுப்பில் சுற்றி, வேஷ்டியாக்கிக் கொண்டார். அறைக் கதவைத் திறந்தார். இரு ளில் இருள்தான் தெரிந்தது. பெரிய குடையொன்றை விரித்து வைத்ததுபோலிருந்தது அறை முன்னுல் நின்ற ஒட்டு மா. இலக எளிடையே இருள் துண்டு துண்டாகத் தேங்கிக் கிடந்தது. வானத் தைப் பார்த்தார். உம், விடிய ஒரு மணி நேரமாகலாம்......

தொழுவத்தில் அரவம் கேட்டது,

சுவரைத் தடவியபடியே சுவர் அலமாரியைத் திறந்தார். மேல் தட்டிலிருந்து வெற்றிலேப் பையையும், கீழ்த்தட்டிலிருந்து ஒவல்டின் டப்பாவையும் எடுத்துக்கொண்டார். நார்க்கட்டிவில் உட்கார்ந்தபடி, டப்பாவைத் திறந்து ஏத்தங்காய் வறுவலை ஒவ்வொன்ருக வாயில் போட்டு மென்ருர், "ஸ்டாக் சிறிதுதானிருந்தது. டப்பா காலி, பையை அவிழ்த்து இரும்பு உரலையும், உலக்கையையும் எடுத்து நிலைப்படியில் வைத்துக்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் *னங், ணங்’ என்ற ஓசை, தாள லயம் தவருமல் கேட்க ஆரம்பித் தது. விடிவெள்ளி நேரத்தில் இந்த ஓசை எழுவது பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும், சமையல் செல்லம்மாவுக்கும், சம்முகத்துக்கும், மாடு கன்றுகளுக்கும் பழக்கப்பட்டுப்போன விஷயம். சம்முகத்துக்கும், சேல்லம்மாவுக்கும் அதுதான் அலாரம். இந்த ஓசை எழுந்ததும். படுத்திருக்கும் ம்ாடுகளும் எழுந்து நின்று சோம்பல் முறிக்கும். சம்மு கம் எழுந்துவந்து சாணியை வ்ழித்தெறிந்துவிட்டு செம்பையும் எண் ணெய்க் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு வருவான். கட்டில் நிற்கும் கன்று பின்வாங்கி முன் பாய்ந்து, கயிற்றை வெட்டி வெட்டி இழுக்கும். . -