பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல்

அணை

- (நிரஞ்சனி) - எஞ்சினியர் சங்கரன் ஸ்தலத்தைப் பார்வையிட வருகிரு ரென் ருல், வேறு எப்படி இருக்கும்? ஒரே கூச்சல், இரைச்சல்தான்!

“மேற்குப் பகுதி வேலையை இப்போது யார் பார்த்துக் கொள் கிருர்கள்? எவளுவது ஒரு கூறு கெட்டவன் கையில் ஒப்படைத் திருப்பீர். உமக்கென்னய்யா, பொறுப்பா தெரிகிறது?”

சங்கரன், சாட்சாத் கைலேயங்கிரி வாசனை சங்கரனேயே எரித்துச் சாம்பலாக்கும் அளவுக்கு அனல் கக்கிக் கொண் டிருந்தார். - - . . . -

ஈசுவரன் மிகவும் சிரமப்பட்டு எச்சிலேக் கூட்டி விழுங்கிக் கொண்டார், பதில் ஏதும் தவருகப் பேசிவிடக் கூடதே என்ற காரணத்தால். - - - - -

"என்னய்யா! மென்று விழுங்குகிறீரே! உம்மையெல்லாம் கொண்டுவந்து என் கிட்டே, அதுவும் இந்த மாதிரி பெரிய திட்டங்கள், வேலைகள் நடக்கிற இடத்திலே, போட்டு விடுகிருன் கம்பெனி முதலாளி. வேலே குட்டிச் சுவராகப் போளுல் அவனுக்கு என்ன? நான் வந்து ஒரு வாரம் ஆகிறது. வேலை என்ன நடந் திருக்கிறது? ஹாம். பேசுமேன் ஐயா!” - - -

ஈசுவரன் பதில் சொல்லத்தான் விரும்பினர். ஆளுல் விரும்பி யதைத் சொன்குல்? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! தனக்கும் தன்னை நம்பி உட்கார்ந்திருக்கும் குடும்பத்தாருக்கும் வழி? மேலதி காரியை எதிர்த்து அவமரியாதையாகப் பேசிளுன் என்ற பட்டப் பெயருடன் சீட்டும் கிழியும். ஏதோ சம்பளம், போனஸ் என்று தவருமல் படியளக்கிருனே, அதில் மண்ணே வாரிப் போட்டுக் கொண்டு விடுவதா......? மேலே போய் விமோசனம் காண முடியுமோ என்றல் தயை, தாட்சணியம், நியாயம், எல்லாம்தான் மானேர்ஜிங் டைரக்ட்ரின் டபேதார் போல் கைகட்டி வாய் புதைத்து ஒதுங்கிப் போய்விடுகின்றனவே! அதனுல்தானே எத்தனையோ தடவை சங்கரன் ஆலகால விஷம் போல் கக்கிய சுடு சொற்களை கசுவரன் விழுங்கியிருக்கிருt. - - -

மீண்டும் சங்கரன் குரல்.