பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாற் கடல்

கிழவர் தேன் கூடு பக்கம் வந்து, "குஞ்சம்மா, குஞ்சம்மா’’. என்று கூப்பிட்டார். சாளரம் திறந்தது. தலை முளைத்தது.

°函L丹耐”° -

"அப்படியா!' முகத்தில் முல்லை மலர்ந்தது. வாசல் பக்கம் வத்தபொழுது சபேசய்யர் இல்லையென்பதை உணரவே, கோஷம் வலுத்தது. - -

பங்க்சம் திடீரென்று, "கிடாசிக் கண்ணுக்கு ஜே' என்று கோஷத்தை விஸ்தரித்தாள். - - தொடர்ந்து, கிடாரிக் கண்ணுக்கு ஜே' என்ற குரல்தான் எதி

ரொலித்தது. -

கோமதியிடம் அறிவிக்க முடியாமல் போனதில் வருத்தம்தான் கிழவருக்கு. அவள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

கிழவர் கொல்லைப்புறம் வந்தார். - - குழந்தைகளும் வீட்டைச்சுற்றிப்பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். செல்லம்மா, பின் வராண்டாவில் நின்றபடி ஊர்வலம் வரும் அழகைக் கண்டு அகம் மகிழ்ந்துபோனுள். வெங்குவின் கை உதறலை யும், முகபாவத்தையும் பார்த்து உடம்பு குலுங்கக் குலுங்கச் சிரித் தாள். அப்படியே படி இறங்கி வந்து அவனேக் கட்டிக்கொண்டு, 'போதும்டா கண்ணு சத்தம் ப்ோட்டது. தொண்டை கட்டிக்கப் போறது' என்ருள். - - - - -

வெங்கு, மாமி முகத்தை ஏறிட்டுப் பார்த்து, 'பாயச மாயாச்சோ?” என்று கேட்டான். . . . .

"நன்கு கேட்டே போ. கிடாரி பிறந்திருக்கு. நான் வச்சுத் தரேன் உனக்கு' என்ருள் செல்லம்மா.