பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி 会五

“ஹாவ், ஹாவ்' என்ருன் சம்முகம்.

முகத்தைத் தடவிக் கொடுத்தவாறே, ஹாவ், ஹாவ்' என்றர் முவர். - -

மாடு மீண்டும் படுத்தது. “தாத்தா, பசுவுக்கு வாலிலெ என்னுது தொங்கறது?’ என்று கேட்டான் வெங்கு.

"கன்னு போடப்போறதுடா, கிடாரிக் கன்னு. கிடாசி பிறக்கும், உனக்கு பாலேக் கறந்து தொந்திக்கு விட்டுக்கலாம்டா, யோகம் தாண்டா பயலெ" என்ருர் கிழவர்.

மாடு 'ம்பே' என்று பயங்கரமாக அலறிற்று. உடம் போடு ஒரு தடவை நெளிந்து புரண்டது. சில நிமிஷங்கள் இந்த அவஸ்தை.

"கன்னு விளுந்திட்டு' என்று கத்திளுன் சம்முகம். "என்ன கன்னு?’ என்று கேட்டுக்கொண்டே கிழவர் பின்பக்கம்

வந்தார். அதே சமயம் மாடும் சட்டென்று எழுந்து மிகுந்த பரபரப் புடன் பின்புறம் திரும்பிக் கன்றை முகந்து பார்த்தது. -

சம்முகம் வாலேத் துக்கிப் பார்த்துவிட்டு, "கிடாரி” என்றன். "கிடாரி.கிடாரி" என்று கத்தினர் கிழவர்.

ஏமாற்றத்திலும் மனச் சோர்விலும் ஆழ்ந்திருந்த குழந்தைகள் கணப்பொழுதில் இந்த உத்ஸாகத்தை வாங்கிக்கொண்டன.

மூன்று பெண்களும் கையைத் தூக்கிக் குதித்தபடி, "கிடாரி, கிடாரி' என்று கத்தினர். - -

வெங்கு ஒரு படி மேலே சென்று, கிடாரிக்கு ஜே' என்று கோஷ மெழுப்பினுன். பெண் குழந்தைகளும் அதை ஏற்றுக்கொண். உார்கள். - -

"கிடாரிக்கு ஜே!

இந்த சந்தோஷச் செய்தியை அறிவிக்க அடுக்களேயைப் பார்த்து விரைந்தார் கிழ்வர். அவசரத்தில் வேஷ்டி நெகிழ்ந்து விட் டது. அதை சரியாகக் கட்டிக்கொள்ளவும் பரபரப்பு இடங் கொடுக்க வில்லை. வயிற்ருேடு துணியை அழுத்திப் பிடித்துக்கொண்டே, 'செல்லம்மா கிடாரி, கிடாரி!' என்று கிழவர் கத்தினர். - ஊர்வலம் கிணற்றடியைச் சுற்றிச் சென்றுகொண்டிருந்தது. கிணற்றடியில் துவைக்கப் போட்டிருந்த ஜம்பரையும் கையிலெடுத் துக்கொண்டு விசிறிஞன் வெங்கு. ஏக காலத்தில் நாலு புஜங்கள் வானத்தில் நிமிர்ந்தன. - -

"கிடாரிக்கு ஜே!'