பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாற் கடல்

வெடி வந்த திக்தில் பாய்ந்தோடத் துடித்த கன்னியப்பன், "கொஞ்சம் பொறுங்கள் முதலாளி: இல்லாவிட்டால் காட்டுப் பன்றி தப்பி ஓடிப்போகும்,' என்று சொல்லிக்கொண்டே வெளியே பாய்ந்தான். -

அவன் பேச்சு வேடிக்கையாக மட்டுமல்ல, ஆவலேத் துண்டு வதாகவும் இருந்தது துரைக்கு. அவன் ரோஸியைக் கூடக் கவனிக் காமல் கன்னியப்பனுடன் ஒடிஞன். காட்டு மனிதன் என்ருல் கன்னியப்பனுக்குத்தான் தகும். காக்கை முள்ளேயும் ஜங்கம் புதர் வேல மரங்கள் எதையும் பொருட்படுத்தாமல் என்ன வேகமாய் ஒடு கிருன்! அவனுக்கு வழி காட்டுவதைப் போல் முன்னுல் தாவியோடு கிறதே ஒரு தாய்! இவன் இருப்புக்கு வேட்டை நாய் வேறு? z

துரை டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தான். விளக்கின் ஒளி எட்டும் தொலைவிலே ஒரு காட்டுப் பன்றி சுருண்டு சுருண்டு விழுந்து விழுந்து ஒடிக்கொண்டிருந்தது. .

"கறுப்பா! விடாதே, பிடி," என்று கத்தினுன் கன்னியப்பன்.

டார்ச் வெளிச்சத்தில் மருண்டு நிற்கும் குழி முயலையும் பொருட் படுத்தாமல் அந்தப் பன்றியைக் குறி வைத்துப் பாய்ந்தது அந்தப் பட்டி நாய். அடிபட்ட பன்றியை நகர வொட்டாமல், அது அழுத் திப் பிடிக்கவும் துரையும் குறவனும் அதன் அருகில் செல்லவும் சரியாக இருந்தது. - .

பன்றியின் தலைப்புறம் உருத் தெரியாமல் பிய்ந்து போய் ரத்த விளகருகியிருந்தது. எப்படி இத்தனே முரட்டு ஜந்துவை இவ்வளவு கடுமையாகத் தாக்க முடியும் என்று வியந்தான் துரை. "இரண்டா, யார் இதை இப்படிச் சுட்டது?’ - .

கன்னியப்பன் மெல்லச் சிரித்தான். "இது நான் வைத்த வெடி : தான் எசமான். மாங்கொட்டைக்குள்ளே இருக்கிற பருப்பை எடுத்து விட்டுக் கரிமருந்தைப்போட்டுக் கெட்டிக்கவேண்டும். வாசனைக்காக

மேலே கொழுப்பை மூடி இறுக்கிவிட்டு இப்படி வயல் புறத்தில்

வைப்பது வழக்கம். வயலத் துவம்சம் செய்ய வரும் காட்டுப் பன்றி இதைக் கடித்தால் போதும். இத்தக் கதிதான்,' என்று பெருமை புேடன் கூறிவிட்டுத் தன் நாயைத் தட்டிக் கொடுத்தான். 8 . . . அதைத் துரை அருவருப்போடு பார்ப்பது அவனுக்குப் பிடிக்க

இந்த உலகத்தில் கறுப்பனைத் தவிர அவனுக்கு வேறு துணையே இல்லை. ஒரு முறை தன் உயிரையும் கொடுக்கத் துணிந்ததே அதை தினத்துக் கொண்டால் இப்போது கூட அவன் மெய் சிலிர்த்தது. அதனுடைய துணிந்த வேலேயால்தானே இப்போது அதன் வலது grಳು ஊனமாக் இழுத்து இழுத்துக்கொண்டு நடக்கும்படி