பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேவலம் ஒரு காய் ! 49

"எனக்குத் தெரியும் ஐயா. என் நாய் அதை அடித்துப் போட்டு விட்டுத்தான் திரும்பும்' என்ருன் குறவன் பெருமையோடு.

கறுப்பன் தன் முகத்திலிருந்த் கருஞ் சிவப்பான ரத்தக் கறை யைத் துரையின் வெள்ளைச் சட்டையில் அப்பியதோடு மட்டுமல்லா மல், அவனுடைய உறையிட்ட பூட்சையும் கெளவியது. துரையின் அருவருப்பு மீறி ஆத்திரம் உடைபடவே காலால் ஓங்கி உதைத்து விட்டான் கறுப்பனே. அவனுக்குள் புகைந்துகொண்டிருந்த குரோ தம் அப்படிப் பற்றிக்கொண்டது.

ரத்த வெறி தீராத கறுப்பன் குப்பென்று.அவன் மேல் பாய்ந்தது.

திட்டமிட்டு வைத்தது போல அடுத்த கணம் அவனுடைய துப்பாக்கி கறுப்பனுக்குக் குறி வைத்துவிட்டது.

'சாமி...சாமி ஐயோ, கறுப்பா!' என்ற குறவனின் அலறலுக் கிடையே வெடித்துவிட்டது ఇశ్రీ థ్రl,

தன் காலுக்கடியில் ரத்தம் கக்கிக்கொண்டு சுருண்டு விழுந்த கறுப்பனே மீண்டும் உதைத்துத் தள்ளிகுன் துரை, "போடா பெரிய நாயைக் கண்டுவிட்டான்! தூக்கி எறிந்துவிட்டு வா. ராத்திரிக் குப் பெரிய வேட்டைக்குப் போகவேண்டும். ஒரு சிறுத்தைப் புலி யாவது சுட வேண்டும்' என்று சொல்லிக்கொண்டே கையலம்பத் தண்ணிர் கேட்டான் அவன். -

மறு நாள் காலையில்தான் குறவனேச் சந்திக்க முடிந்தது.

துரை தன் ரோஸிக்குச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி விட்டு அப்போதுதான் பெளடர் போட்டுக்கொண்டிருந்தான்.

"ஏண்டா ராத்திரி మితిమతి" என்று அதட்டின்ை துரை.

'இல்லை சாமி, அந்தக் காட்டுப் பன்றியை இழுத்துக்கொண்டு வந்து.....' என்று கைகளைப் பிசைந்துகொண்டான்.

போடு சக்கை! ராத்திரியெல்லாம் அமர்க்களமா? ೯Tirgir துர்ை, உற்சாகமாகத் தன் ரோஸியின் கால்களே உருவி விட்டுக் கொண்டே. * . -

குறவன் வறண்ட சிரிப்புச் சிரித்தான். டேய், என்னடா இன்னும் ஆகவில்லை!" என்று உள் பக்கம் திரும்பி இரைந்தான் துரை. -

இதோ, கொண்டு வந்துவிட்டேன் சார்' என்று பீங்கான் தட்டில் ரோஸிக்கு ஆகாரம் கொண்டுவந்து வைத்தான் சமையல்

காரன். х

tar-4