பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜவாலை

வெ. ரதன்கிருஷ்ணன்

அன்று பெளர்ணமியல்ல, அதற்கு முந்தின நாள். நிறைவு பெருத நிலாவின் ஒளி அந்தி இருளே விரட்டிவிட்டு உலகத்தை வியாபித்துக் கொண்டிருந்தது. அதன் அமுத கிரணங்கள் பரந்த கடலின்மீது படியும்போது இன்பலாகிரியால் உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கருநீலக் கடல் தன் உடலை அசைத்து நெளிந்தது. அந்த அசைவின் நெளிப்பில் எழுந்த அலைகள் கரையை நோக்கித் தவழ்ந்து வரும்போது கடலானது கண்ணேப் பறிக்கும் வெள்ளிக் குழம்பைக் கொப்புளித்துக் கொண்டிருப்பதுபோன்ற ஒரு பிரமையை உண்டாக்கியது. -

டாக்ஸியை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டுத் தன் தொழிலையும் மறந்து வேலாயுதம் எதிரே விரிந்து கிடத்த நீலக்கடலையும் அதன் கரையில் அமர்ந்து தங்கள் கவலைகளையும், உடல் களேப்பையும் தணித்துக் கொண்டிருந்த மனிதக் கூட்டத்தையும் நினைத்துப் பார்த் தான். ஆழ்கடலுக்கும் மனித உள்ளத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு நீண்ட காலமாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கவிஞர் களும், கதாசிரியர்களும் மனித நெஞ்சத்தை ஏன் கடலின் ஆழத் துடன் ஒப்பிட வேண்டும்? அதிருக்கட்டும், இந்த அலைகள் தாம் ஏன் மாலே நேரத்தில் அவற்றின் கரையில் ஜனங்கள் வந்து அமரும் போது குதித்துக் குதித்துக் கும்மாளம் போடவேண்டும்? எதற்காக அவை இப்படி ஹோவென்று கோஷமிடுகின்றன? தன் நெஞ்சின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் எந்த ரகசியத்தைக் கூற இப்படித் துடிக்கின்றன? ஆம்; அது வெறும் ரக்சியமல்ல, ரகசியத்தின் சுமை: அந்தப் பெரும் சுமையைத் தாங்க முடியாமல்தான் அவை இப்படி வேதனையுடன் தவிக்கின்றன. எத்தனை பேர்கள் எத்தனை வருஷங் களாக இந்தக் கரையில் நின்றுகொண்டு தங்கள் மகிழ்ச்சியையும், அயர்ச்சியையும், கண்ணிரையும் வெளியிட்டிருப்பார்கள்! மைந்த இனப் பறிகொடுத்த தந்தையின் வேதனையையும், வீட்டில் நாலு பேர் முன்னுல் பேச வெட்கப்பட்டுக்கொண்டு இங்கு வந்து தங்கள் உள் ள்க் காதலையும், ஆசையையும், அன்பையும் போட்டி போட்டுக் கொண்டு கிடைத்த அவகாசத்தில் பரிமாறிக்கொள்ளும் இளம் தம்பதிகளின் சுவையான கட்டுரைகளையும் இக்கடல் கேட்டிருக்கும். வாழ்க்கையில் உணர்ச்சி வசப்பட்டு ஏமாற்ற மடைந்த உள்ளங்: களின் ஆற்றமை, வேலை கிடைக்காமல் அலைபவர்களின் குமுறல்... இதுமட்டுமா? மானிடப் பிறவியின் சில பயங்கரச் செயல்களைக்கூட அது பார்த்திருக்கும்! - - -