பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?8 பாற் கடல்

"அப்படியானுல் உட்கார்ந்துக்கோ, மருதாணி யிடறேன்.”*

அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப் போச்சு, என்னம்மா பண்றேள்?’ அம்மா கையிலிடப் போகிருராக் கும் என்று நினத்துக் கொண்டிருந்தேன். ஆளுல் என் பேச்சு அம்மாவுக்குக் காது கேட்கவில்லை, என் பாதங்களே எங்கோ நினே வாய் வருடிக் கொண்டிருந்தார். இத்தனே வேலே செய்தும் பூப் போன்று மெத்திட்ட கைகள். எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென என் பாதங்களைக்கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவை மேல் குனிந்தார். அவர் தோள்களும் உடலும் அலேச் சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண்பட்டுப்போல் அவர் கூந்தல் பளபளத்தது. என் பாதங்களின் மேல் இரு அனல் சொட்டுக்கள் உதிர்ந்து பொரிந்தன.

'அம்மா! அம்மா!' எனக்கு அழுகை வந்துவிட்டது. அதுவே ஒட்டுவாரொட்டி. எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லே... -

"ஒண்னுமில்லேடி குட்டி, பயப்படாதே. அம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டு கண்ணேத் துடைத்துக்கொண்டார். "எனக்கு என்னவோ நினைப்பு வந்தது. எனக்கு ஒரு பெண் இருந்தாள். முகம், உடல்வாகு எல்லாம் உன் அச்சுத்தான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள். என் நெஞ்சை அறிஞ்சவள் அவள் தான். முனு நாள் ஜூரம். குழந்தை முதல் நாள் மூடிய கண்ணே அப்புறம் திறக்கவே யில்லே, மூளையில் கபம் தங்கி விட்டதாம். இப்பொத் தான் காலத்துக் கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புது தினுசாய் கூறதே? பின்னுல் வந்த விபத்தில் அவளே நான் மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆணுல் இப்போத்தான் தெரியறது. உண்மை பில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப்பதற்கில்லே. நல்லதோ கெடுதலோ அது அது, சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்துவிடு வது போல், உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்து விட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், அடி முட்டாளே! இதோ இருக்கின் றேன். பார்’ என்று தலைதுாக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே, போகப்போக நம்மைத் தாங்கும் மணுே சக்தியாய்ச் கூட விளங்குகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும் நானும், எங்க ளுக்கு நேர்ந்த தெல்லாம் நேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத் துலே நீடிச்சு இருந்திண்டிருக்கணும்?”

இதைச் சொல்லிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன் ஆன அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளிற்ை போல், ஒரு பெரு மூச்செறிந்தார்; அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடு வதில் முனைந்தார். ஆனல் அவர் எனக்கு இடவில்லே என் உரு வகத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண் ணின் பாவனேக்கும் இட வில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்குப் பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணி யிட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார்! இந்தச் சமயத்திற்கு அந்த இளமையின் சின்னமாய்த்தான் அவ