பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 4 பால காண்டம் போயிற்று என்பதற்கு, பொன்விலை மகளிரின் மனம் கீழே தாழ்ந்த நிலையில் இருப்பது ஒப்புமையாக்கப் பட்டுள்ளது. இங்கே, கீழே போய்' என்பது, கீழ்த்தனமாய் இழிந்ததாய்ப் போயிற்று எனவும், மிகவும் ஆழமாகக் கீழ்உலகம் வரை போயிற்று எனவும் இருபொருள் தந்து நிற்கிறது. சிவப்பிரகாச அடிகளார் பிரபுலிங்கலீலை. மாயை உற்பத்தி கதி என்னும் பகுதியில், அகழி, கீழ் உலகின் கீழே மண்ணுலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனது முடிவரை தாழ்ந்து விட்டதாகக் கூறியுள்ளார்: மேதில் சூழ் கிடந்த தொல்லகழி தாழ்ந்து ஒர் அனந்தன் முடிமேல் கின்றன்று' (14) என்பது பாடல் பகுதி, கீழே போனது என்பதற்கு, பொன் விலை மகளிரின் மனம் கீழ்த்தரமானது என்பது ஒப்புமை யாக்கப்பட்டுள்ளது. எளிய பொருள் கொடுத்தால் போதாதாம். பொன் தரவேண்டும். பொருள் பெண்டிர் என்றும், பொருள் பொருளாளர் (பொருளையே குறிக்கோளாகக் கொண்டவர்) என்றும் வள்ளுவர் கூறியுள்ளது, ஈண்டு நோக்கத்தக்கது. போலிக் கவிஞரின் கவிகள் பொருள் தெளிவின்றி இருப்பது போல், அகழி நீர், பல்வேறு பொருள்களின் கலப்பால் தெளிவில் லாமல் உள்ளதாம். கல்லாதான் கவியை எள்ளாதார் இலர். ஈண்டு, 'கல்லாதான் சொல்காமுறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று' (402)

  • கல்லாதவரும் கனிநல்லர் கற்றார் முன்

சொல்லா திருக்கப் பெறின்' (403) 'கல்லாதான் ஒட்பம் கழியருன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்? (404) என்னும் குறட்பாக்கள ஒப்புநோக்கத் தக்கன.