பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பால காண்டப் எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ! (73) கல்வியில் வல்லவர் என ஒருவர் இருந்தால் அல்லவா, கல்வியில் வல்லமை இல்லாதவர் என ஒருவரைக் கூற முடியும்! பொருள் இல்லாதவர் என ஒருவர் இருந்தால் அல்லவா, பொருள் உடையவர் என ஒருவரைக் கூற முடியும்? கம்பர் நயமாக இப்பாடலை அமைத்துள்ளார். இப்பாடலின் இறுதியில் உள்ள மாதோ' என்பதைச் சிலர் அசை என்பர். அசை என்பது பொருள் இன்றி இடம் நிரப்புவது. எனவே மாதோ என்பதை அசை எனக் கூறல் பொருந்தாது. இது ஆகா!' என்பது போன்ற வியப்பைத் தரும் சொல்லாகும். பொருள் இன்றி இடம் நிரப்புவன வாகக் கருதப்படும் அசை என்பதற்கும் அளபெடை என்பதற்கும் பொருள் உண்டு. அசைகளையும் அளபெடைகளையும் பொருள் உடையனவாகப் பண்டைக் காலத்தில் ஆண்டார்கள். பிற்காலத்தில் சிலர்-அல்லபலர்,அவற்றைப் பொருளற்றனவாகக் கருதி ஆளலாயினர். ஊர் என்றால் இவ்வாறு இருக்க வேண்டும் எனக் கம்பர் இப்பாடலின் வாயிலாகக் கண்டுள்ளார். அரசியல் படலம் தயரதனின் ஒப்புமைப் பண்பு தயரதன், மக்களிடத்தில் அன்பு செலுத்துவதில் தாய் போன்றவன்;பல நன்மைகள் செய்வதில் தவம்போன்றவன்; மக்களை நல்வழியில் செலுத்துவதில், பெற்றோரை நற்கதி செலுத்தும் சேய்போன்றவன்; மக்கட்கு நோய் போலத் துன்பம் நேரின் மருந்து போல் செயல்பட்டுக் காப்பவன்; கல்வி கேள்வி ஆராய்வோர்க்கு வேண்டிய நலம் செய்வதில், அறிவு போல் செயல்படுபவன். எவர்க்கும் இத்தகையவன்: