பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 109 செந்தாமரைக் காடு என்பது மலரின் மிகுதியைக் குறிக்கிறது. பாவேந்தர் பாரதிதாசனது வாழ்வினில் செம்மையை' என்று தொடங்கும்பாடலில், செந்தாமாைக் காடு பூத்தது போலே செழித்த என் தமிழே ஒளியே வாழி' என்னும் பகுதி உள்ளது. மலரின் மிகுதியைக் காடு எனக் கூறுதல் பொருந்தாது என யாரோ கருத்து தெரிவித் தாராம். இங்கே கம்பர் தாமரைக் காடு பூத்து’ என்று கூறியுள்ளாரே. சீவக சிந்தாமணியில் ஆம்பல் ஆய் மலர்க்காடு என ஆம்பல் மலரின் தொகுதி காடு எனப் பட்டுள்ளதே. மற்றும், திருவாசகத்தில்-திருச்சதகம் என்னும் பகுதியில், "தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே இரண்டு மிலித் தனியனேற்கே (26) என்று தாமரைக் காடே கூறப்பட்டிருக்கிறதே. திவ்வியப் பிரபந்தத்திலும் இத்தகைய அமைப்பு உள்ளது. எனவே, மலர்த் தொகுதியைக் காடு எனல் பொருந்தும். தாடகை வதைப் படலம் வனம் எலாம்: இராம இலக்குமணர் விசுவாமித்திரருடன் ஒரு பாலைவனம் வழியாகப் போய்க் கொண்டிருந்தனர். காய்ந்து பிளந்த சுள்ளியிலிருந்து அகில்களும், காய்ந்து பிளந்த மூங்கிலிலிருந்து முத்துகளும், பாம்புகளின் வாய் களிலிருந்து உமிழப்பட்ட மாணிக்கங்களும் வனம் எலாம் கிடந்தன. பாடல்: பேய்பிாங் தொக்க கின்று உலர் பெருங் கள்ளியின் தாய்பிளங் துக்க கார் அகில்களும், தழை,இலா வேய்பிளந் துக்க வெண் தரளமும், விட அரா வாய்பிளங் துக்க செம் மணியுமே வனம் எல்லாம் (8)