பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பால காண்டப் ஈண்டு சிவப்பிரகாசரின் பிரபுலிங்க லீலைப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது: மோகினி என்னும் அரசி, தவம் செய்து பெற்ற தன் பெண் குழந்தையை, ஏழை தன் சிறிய ஒரே நிலத்தை நன்கு விளையும்படிக் கண்ணும் கருத்துமாய்க் காக்கும் செயல் போலக் காத்தாளாம். "மிடியன் ஒருசெய் யாளன் அச்செய் விளையக் காக்கும் செயல் போல ..... கொடிய நோன்பு செய்து ஈன்ற கொடியை வளர்த்தாள் மோகினியே (மாயையின் உற்பத்திகதி - 49) என்பது பாடல் பகுதி. (கம்பரைச் சிவப்பிரகாசர் கற்றிருக்கலாமோ!) மற்றும், ஈண்டு, குறுந்தொகையில் உள்ள - "ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓர் ஏர் உழவன் போல' (13 i–4, 5) என்னும் பாடல் பகுதியும், தனிப் பாடல் திரட்டு ஒன்றிலுள்ள, . 'மா ஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட’’ என்னும் பாடல் பகுதியும் ஒப்பு தோக்கத்தக்கன. திரு அவதாரப் படலம் தாமரைக் காடு: தேவர்க்கு அருள் செய்ய வந்த திருமால், கருமுகில் செந்தாமரை மலர்த்தொகுதி பூத்ததுபோல, இருசுடர் களையும் இருபக்கங்களிலும் ஏந்தி, திருமகளோடு ஒரு பொன் மலை உச்சியில் அமர்ந்து வருவதுபோல் கருடன் மேல் அமர்ந்து வந்தாராம்:

  • கருமுகில் தாமரைக் காடு பூத்து கீடு

இருசுடர் இருபுறத் தேந்தி, ஏந்து அலர்த் திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின்மேல் வருவது போல் கருடன்மேல் வந்து தோன்றினான்’ (10)