பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 111. அழுத்திக் கொண்டு நாணேற்றி வளைத்து அம்பு எய்தான். அவள் எறிந்த குலப்படை, அம்பினால் இரு துண்டாகி வீழ்ந்தது:

  • மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும்

கோலவில் கால் குனித்ததும் கண்டிலர் காலனைப் பறித்து அக்கடியாள் விட்ட சூலம் அற்றுவீழ் துண்டங்கள் கண்டனர்' (47) அப்போது அங்கு இருந்தவர்கள், இராமன் அம்பை எடுத்ததையும் வில்லை வளைத்து எய்ததையும் காண வில்லை; சூலம் இரண்டு துண்டாகி விழுந்ததைக் கண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, கண்மூடிக் கண் திறப்பதற்குள்-ஒருநொடிப் பொழுதில் மிகவும் விரைவாகச் செயல்பட்டுச் சூலத்தைத் துண்டித்தான் என்பது இதன் கருத்து. பின்னால், கார்முகப் படலத்தில் வரும் எடுத்தது. கண்டனர் இற்றது கேட்டார்’ என்னும் பகுதிபோல் இருக்கிறது இது. தாடகை காலனைப் பறித்து விட்ட சூலம் என்பது கவனிக்கத் தக்கது. உயிரைக் கொல்லுபவன் காலன். அவனது உரிமையை-அதிகாரத்தை இந்தச்சூலம் பறித்துக் கொண்டு தான் கொல்ல இருந்தது என்று. கருத்துக் கொள்ளலாம். வேறு கருத்து கூறுவாரும் உளர். சுடுசரம் : இருள் போல் கரிய தாடகையின் வயிரம் பாய்ந்த, மலைக்கல் ஒத்த நெஞ்சிலே தைக்கும்படி இராமன் விட்ட அம்பு, அவளது நெஞ்சைத் துளைத்துக் கொண்டு, பின்புறம்-முதுகுப் புறம்போய் அப்பால் வீழ்ந்தது. சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுத்தலும், வயிரக் குன்றக்,