பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பால காண்டப் என்னும் புற நானூற்றுப் பாடல் பகுதியை நினைவுறுத்து கின்றது. சடையப்ப வள்ளல் சொன்னசொல் தவறுவ தில்லை; அதுபோல், விசுவாமித்திரன் அளித்த படைக்கலம் எய்தால் தவறுவதில்லையாம். தம்மைப் புரந்த சடையப்பருக்கு, இப்பாடல் வாயிலாகக் கம்பர் நன்றிக் கடன் செலுத்தியுள்ளார். நீண்ட கை: விசுவாமித்திரன் இராமனுக்கு மாவலியின் வரலாறு கூறுகிறான். திருமால் குள்ள அந்தணனாய் (வாமணன்) வடிவெடுத்து மாவலிபால் சென்று பின்வருமாறு கூறிக் கேட்கிறார்: விரும்பிக் கேட்பவர் விரும்பியதற்கு மேலாககேட்பதற்குக் கூடுதலாக எடுத்து வீசி வீசிக் கொடுத்து அதனால் நீண்டு போன கையை உடையவனே! நின்பால் உதவி வேண்டுவோர் மாண்புடையர் உதவி வேண்டாதவர் மாண்பு இல்லாதவர்-என்று கூறினான். 'ஆண்தகை அவ்வுரை கூற அறிந்தோன் வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி நீண்ட கையாய் இனி கின்னுழை வந்தோர் மாண்டவர்; அல்லவர் மாண்பிலர் என்றான்' (14) வாமன அந்தணன் மாவலியை மடக்குவதற்காகச் சூழ்ச்சியுடன் கூறும் உரை இது. அதாவது, உன்னிடம் உதவி வேண்டுபவர் உயர்ந்தவர்; வேண்டாதவர் உயர்ந்தவர் அல்லர் என்று கூறித் தனக்கு உதவுமாறு தூண்டுகிறான். கரவாதவர் முன் இரத்தலும் ஒர் அழகுடைத்து- இரத்தலும் ஈதலே போலும் என்னும் கருத்துகள் கொண்ட, கரப்பிலா கெஞ்சின் கடனறிவார் முன்கின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து' (1053)