பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 113 பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்த்த தடியுடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை தலைகள் தோறும் முடியுடை அரக்கற்கு அந்நாள் முக்தி உற்பாதம் ஆகப் படியிடை அற்று வீழ்ந்த வெற்றியம் பதாகை ஒத்தாள்' (51) கொடி அறுந்து வீழ்தல் தீய குறி-கெட்ட சகுனம் என்பது இப்பாடலால் அறியப் படுகிறது. வேள்விப் படலம் வறுமை மருந்து : தாடகை வீழ்ந்ததும் தேவர்கள் பூ மழை பொழிந்தார் களாம். பின், விசுவாமித்திரர் இராமனுக்குச் சில படைக் கலங்கள் வழங்கினார். அப்படைக்கலங்கள், மக்களின் வறுமைப் பிணிக்கு மருந்துபோல் உதவி செய்யும் வெண்ணெய் நல்லூர்ச் சடையனின் சொல் போன்றவையாம்:

  • விண்ணவர் போய பின்றை விரிந்த பூமழையினாலே தண்ணெனும் கானம் நீங்கித் தாங்கரும் தவத்தின்

மிக்கோன், மண்ணவர் வலுமை நோய்க்கு மருந்தன சடையன வெண்ணெய் அண்ணல் தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே' (1) இப்பாடலில் உள்ள மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து என்னும் பகுதி,

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எனக்கே" (173–11, 12),