பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பால காண்டப் 'ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருகிலம் பிளக்க வேர்வீழ்க்கும்மே” (35) என்ற பாடலும், நன்னெறி நூலில் உள்ள

  • நல்லார் செயுங் கேண்மை நாடோறும் நன்றாகும்

அல்லார் செயுங்கேண்மை ஆகாதே' (38) என்னும் பாடல் பகுதியும், "நிறைரே நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னிர பேதையார் நட்பு' (782) என்னும் குறட்பாவும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. அருளாளர்கள் (ஞானிகள்) வேறுபாடு காணாது ஒரே நிலையில் இருப்பது போல, குதிரைகள் ஒன்றுக் கொன்று வேறுபாடு தெரியாமல் ஒரே மாதிரியாய்த் தோன்றினவாம். சுழற்சியில், கண்ணுக்கு, இன்ன குதிரைஇது-அன்ன குதிரை அது என்று தெரிந்து கொள்ள முடியாதவாறு சுழன்று ஓடினவாம். கம்பரின் இப்பாடல் கருத்துக்கு அரண் செய்வனவாக உள்ள சில இலக்கிய மேற்கோள் களைக் காணலாம்:- குலால் மகன் திகிரி போல’ என்பது, சீவக சிந்தாமணியில் உள்ள,

கூட்டுற முடுக்கிவிட்ட குயமகன் திகிரி போல

வாட்டிறல் தேவதத்தன் கலிமாத் திரியு மன்றே (786) என்னும் பாடல் பகுதியோடு ஒப்பு நோக்கத் தக்கது. வட்டமாய், எல்லாம் ஒன்று போலத் தோற்றம் அளித்தமை, பரஞ்ாேசதியார் அருளிய திருவிளையாடல் புராணத்திலும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவகைச் சாரியும் எதிர்ந்து வட்டமாய்

வருவழி ஞெகிழிபோல் மறுகெலாம் ஒரு துரகதமே நிலைகின்ற தோற்றம் ஒத்து ஒருவற நடத்தினான் ஒரு கணத்தினே' (நரிபரியாக்கிய படலம்-99),