பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 125 (ஒர் இசைக்கருவி) முழங்கியதாம், பெண்கள் வலம் வந்ததைப் பார்த்ததும் முழவு ஒலியைக் கேட்டதும், சில மந்திக் குரங்குகள், மழைவரப் போகிறது என அஞ்சி, மரத்தின் மேல் ஏறி அண்ணாந்து விண்ணை நோக்கி முகில் உள்ளதா என்று பார்த்தனவாம். 'வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சிச் சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திருவையாறே (2.1) என்பது பாடல் பகுதி. இந்தப் பாடலில் மயில் நடனம் ஆடியதாகவும் முகில் இடி இடித்ததாகவும் சொல்ல வில்லையே எனில், பின்வருமாறு கொள்ளல் வேண்டும். அதாவது: பெண்கள் வலம் வந்தது மயில்கள் நடம் இடுவது போலவும், முழவு முழங்கியது இடி இடித்தது போலவும் தெரிந்தனவாம். அதனால், மழை வரும் என மந்திகள் அஞ்சி முகிலை நோக்கினவாம். எவ்வளவு நயமான கற்பனை! கடவுள் வழிபாட்டுப் பாடலிலும் நயமான இலக்கியச் சுவையைத் தந்துள்ள ஞானசம்பந்தர் பாராட்டிற்கு உரியவர். இந்தக் கற்பனையை அடியொற்றியதுபோல் கம்பரும் பாடியுள்ளார். இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற அடிப்படையில் சம்பந்தரின் பாடல் ஈண்டு தரப்பட்டது. சந்திரசயிலப் படலம் துருக்கர் தந்தவை: அயோத்தி மக்கள் மிதிலைக்குச் செல்லும் வழியில் குதிரைகளை ஓய்வுக்குக் கட்டி வைத்தனர். அந்தக் குதிரைகள் துருக்கர் தர வந்தவையாம். அதாவது, சோனகர் என்னும் அரபு நாட்டவரிடமிருந்து வாங்கினளை யாம். குதிரைகளை விற்பவர்கள், அவற்றைப் பேணும் முறையைத் தமிழ் நாட்டவர்க்குக் கற்றுக் கொடுப்பதில்லை;