பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 141 மயில் முதலியன வலம் செல்வது நல்லகுறி (சகுனம்) ஆகும். காகம் முதலியன இடம் செல்வது தீக் குறியாகும். மன்னன், புள்ளின் குறி தேர்வானை அழைத்து இதன் நிலைமையை வினவினான். அதற்கு அவன், முதலில் தீமை வந்து, பின் நன்மை எய்த, தீமை விலகிவிடும் என்றான். அதன்படி, தயரதன் குல எதிரியாகிய பரசுராமன் வந்து எதிர்த்து அச்சுறுத்த, இராமன் பரசுராமனை வென்று மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டினான். எனவேதான், இருவகைக் குறிகளும் தென்பட்டதாகக் கூறப்பட்டன. இந்தப் பாடலில் உள்ள இடையூறு என்னும் சொல்லைக் கவனிக்க வேண்டும். இந்தச் சொல், துன்பம் என்னும் பொருளில் பலராலும் ஆளப்படினும், இடையில் உற்றது இடையூறு' என்னும் சரியான பொருளில் இப் பாடலில் ஆளப்பட்டுள்ளது. தயரதன் சென்ற வழியிடையே உற்ற துன்பமல்லவா இது? அரியும் சிவனும் ஒண்ணு (ஒன்று): முற்காலத்திதில் சிவன் ஒரு வில்லும், திருமால் ஒரு வில்லும் வைத்திருந்தனர். இவற்றுள் எது சிறந்தது என்று தேவர்கள் பிரமனை வினவினர். எது வலியது என்று அறிவதற்காக, பிரமன், உண்மையில் ஒருவராய் வெளிக்கு இருவராயிருக்கும் சிவனையும் திருமாலையும் போர்புரியச் செய்தான். போரில் சிவன் வில் ஒடிந்தது. அதுதான் சனகனிடம் இருந்த வில். திருமாலின் வில் வழி வழியாக வந்து பரசுராமனுக்குக் கிடைத்தது. சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்னி வேரியங் கமலத்தோனும் இயைவதோர் வினயம் தன்னால் யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவர் தம்மை மூரிவெஞ் சிலைமேல் இட்டு மொய்யமர் மூட்டி விட்டான்' (28)