பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 143, உயிர் பிரிந்த உடல்: அனைவரும் மிதிலையிலிருந்து அயோத்திக்கு வந்த, பின்னர், கேகய நாட்டிற்குச் சென்று வருமாறு தயரதன் கட்டளையிட்டதால், பரதன், இராமனது திருவடி தன் தலையில் பொருந்தும்படிக் கீழே விழுந்து வணங்கி விடை பெற்று, உயிரை விட்டு உடம்பு பிரிந்து போதல் போல் புறப்பட்டுச் சென்றான்: "எவலும் இறைஞ்சிப் போய், இராமன் சேவடிப் பூவினைச் சென்னியில் புனைந்து போயினான் ஆவி அங்கு அவனலது இல்லை ஆதலான் ஒவல் இல் உயிர் பிரிந்து உடல்சென் றென்னவே' (48) பரதன் தந்தையை வணங்கிப் பின் இராமனை வணங்கிச் சென்றான். பரதனுக்கு இராமன் உயிர் போன்றவன். அதனால், உயிர் பிரிந்து உடல் சென்றது போல் பரதன் சென்றான் என்பது கூறப்பட்டுள்ளது. இராமன் பரதன் தொடர்பாகப் பின்னால் நிகழ இருக்கும் நிகழ்ச்சிகட்கு ஒர் அடிப்படை போட்டது போல் இருக்கிறது இது. இவ்வாறாகப் பால காண்டத்திலுள்ள சிறப்புறு கனிகள் சிலவற்றை அருந்திச் சுவைத்தோம். இனி, அடுத்த மரத்திற்கு ஏகலாம்.