பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கற்பனைக் கனிகள் அடுத்து இதோ ஒரு மரம்-கற்பனைக் கனிகள் உள்ள மரம் இருக்கிறது. இதன் கனிகளையும் துய்க்கலாம்: கழகக் காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களில் கற்பனை மிகுதி, வரலாற்றுத் தொடர்புடைய கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களில் கற்பனைக்கு மிகுந்த இடம் உண்டு. கற்பனை இல்லையேல் அவை இலக்கியங்களாகக் கருதப்படாமல், வரலாற்று நூலாகவே எண்ணப்படும். வரலாற்று நூலாசிரியன்,சிறிதும் கற்பனை இல்லாமலும், தன் கருத்தை வலிந்து புகுத்தாமலும் வரலாற்றை அமைக்க வேண்டும். இங்ங்னமின்றி, கற்பனை யும் சொந்தக் கருத்தும் இடம் பெறுமாயின், அவை இலக்கியங்களாகக் கருதப்படும். எனவே, வரலாற்றுத் தொடர்புடைய கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் உள்ள கற்பனைக் கனிகளைக் கண்டு நுகரலாம் நாட்டுப் படலம் தேன் வகை : கோசல நாட்டில் பலவகைத் தேன்கள் கிடைக்கின்றன . கரும்பாலையில் பிழியும் கருப்பஞ் சாறும், தென்னம் பாளையி லிருந்து வரும் கள்ளும், சோலையிலுள்ள கனி களின் சாறும், தேனடையிலிருந்து இழிகின்ற தேனும், மக்கள் அணியும் மலர் மாலைகளில் துளிக்கும் தேனும், கப்பல்கள் வந்து போகும் கடலில் போய்க் கலக்கின்றன. அவற்றை மீன்கள் பருகி மகிழ்கின்றனவாம்.