பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பால காண்டப் ஒண்கணார் = பெண்கள். நளினம்=தாமரை. மழலைப் பிள்ளை = இளங்குஞ்சு. மேதி = எருமை, பச்சைத் தேரை = பச்சைத் தவளை, வளர்த்திய’ என்னும் சொல், கண்மணியே கண்வளராய்' என்று தாய் பாடிப் படுக்கையில் கிடத்தித் தூங்கப் பண்ணுவதை நினைவு செய்கிறது. எருமை கன்றை நினைத்துப்பால் சொரிகின்ற தாய்த்தலை யன்பை என்னென்பது! அன்னத்திற்கும் தாமரைக்கும் உள்ள தொடர்பை, மணிமேகலையில் உள்ள

அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய

தன்னுறு பெடையைத் தாமரை அடக்க'(5-123; 124) என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். கூட்டு விளக்கு : கோழி குப்பையைக் கால்களால் கிளற, குப்பையின் உள்ளிருந்த மாணிக்கங்கள் வெளியில் தெரிகின்றன. அவற்றைக் குருவிகள் மின்மினி என்று எண்ணி எடுத்துக் கொண்டு போய்த் தம் கூடுகட்குள் விளக்காக வைக்கின்றனவாம்.

சூட்டுடைத் தலைத் துாகிற வாரணம்

தாள் துணைக் குடையத் தகைசால்மணி மேட்டு இமைப்பன மின்மினி யாமெனக் கூட்டினுள் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ (27) சூடு - தலைக்கொண்டை, து நிறம் = தூய்மையான வெண்ணிறம். வாரணம் = கோழி. மேடு = குப்பை மேடு, குரீஇ = குருவி. குப்பையைக் கோழி கிளறுவது என்றும் உள்ளது. இதனால் கோழி குப்பைக் கோழி என்றே குறுந்தொகையின் ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது பகுப்பைக் கோழித் தனிப்போர் போல' (30-6) என்பது பாடல் பகுதி. குப்பைக் கோழியைக் குறிப்பிட்டி ருப்பதால், இப்பாடலைப் பாடிய புலவர் குப்பைக் கோழியார் என்னும் பெயரால் வழங்கப்படுகிறார்.