பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 155 என்னைத் தவிர வேறு யார் வந்து பொத்த முடியும்? வேறு ஒருத்தியின் தொடர்பு உண்டு போலும் என்றெண்ணி ஊடல் கொண்டாள். பின்வரும் பாடல்களால் இவற்றை அறியலாம்: 'செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி, அம்மா! இவை மங்கையர் கொங்கையின் ஆய என்ன, எம்மாதர் கொங்கைக்கு இவைஒப்பன என்று ஓர் ஏழை விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்துயிர்த்தாள்' (17) செம்மாந்த' என்பது, இளநீர்-கொங்கை ஆகிய வற்றின் எடுப்பான தோற்றத்தைக் குறிக்கிறது. ஏழை = பெண். போர் என்ன வீங்கும் பொருப்பன்ன பொலங்கொள் திண்தோள் மாரன் அனையான் மலர்கொய்து இருந்தானை வந்து ஓர் காரென்ன கூந்தல் குயில் அன்னவள் கண்புதைப்ப 'ஆர்' என்னலோடும், அனலென்ன அயிர்த்து உயிர்த்தாள்' (18) மாரன் அனையான் = மன்மதனை ஒத்த அழகன். 'ஆர்' என்று கேட்டதும், நெருப்புபோல் பெருமூச்செறிந் தாளாம். இந்தக் கற்பனையைக் கம்பர் தாமே இயற்கை யாகக் கூறியிருப்பாரோ? அல்லது திருக்குறளிலிருந்து அறிந்திருப்பாரோ? இந்த ஐயத்திற்குக் காரணம், திருக்குறள்-புலவி நுணுக்கம் என்னும் தலைப்பில் உள்ள பத்துக் குறள்களுள் ஆறு குறள்கள் இத்தகைய கருத்துடை யவையாய் இருப்பதுதான். அக்குறள்களைக் காண்போமே: கோட்டுப் பூச்சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று ' { 1313)

  • யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று' (1314)