பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 . பால காண்டப் அப்பறவையைப் பிடித்துக் கொள்வார்களாம். அது போன்றது இது. நூலின் உள்ளும் கம்பரால் அசுணமா? குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ மாக்கவி: உலகம் என்னை இகழவும் அதனால் எனக்குக் குற்றம் வந்து சேரவும் யான் இந்நூலை இயற்றுவது, பொய் அற்ற சீரிய நேரிய கேள்விப் புலமையுடைய அறிஞர்கள் அருளிய தெய்வத் தன்மையுடைய சிறந்த கவியின்-கவிஞரின் மாண்பைத் தெரிவிக்கவேயாம். வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாது எனின், பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே' (6) தம்மை உலகம் இகழவும் குற்றம் உண்டாகவும் இந்நூலை இயற்றுவதாகக் கம்பர் தம்மை மிகவும்தாழ்த்திக் கொண்டுள்ளார். அளவுக்கு மீறிய அவையடக்கம் இது. அவர் கூறியது உண்மையன்று, ஆனால், அவர் கூறியதற்கு ஏற்பச் சிலர் குற்றம் குறைகாண்பதை இன்றும் காணலாம். பொய் இல் கேள்விப் புலமையினோர் வால்மீகி எனச் சிலர் பொருள் கொண்டு,அவர் இயற்றிய இராமாயண நூலின் பெருமையை அறிவிக்கக் கம்பர் பாடியதாகக் கூறுவது ஒரு கொள்கை. புலமையினோர் என்பது ஒருவரை மட்டும் குறிக்கும் சொல்லாட்சியாகாது; ஒருவர்க்குமேல் சிலர் பாடிய நூல்களின் பெருமையைத் தெரிவிப்பது நோக்கம் எனக் கூறுபவரும் உளர். பிறர் நூல்கள் என்பன வட மொழியில் உள்ள இராமாயண நூல்களே. கம்ப இராமாயணத்தைக் கற்கின் வடமொழி நூல்களின் பெருமையை அறிவது எப்படி? தாய் மொழி வழிக் கல்வியின் தரம் இங்கே உணரப்பட வேண்டும்.தாய் மொழியில் உள்ள கம்பர் நூலைத் தமிழர்கள் முதலில் கற்கின், அந்தக் கதை யமைப்பின் துணை கொண்டு பிறமொழி நூல்களை எளிதில் கற்கமுடியும்-என்பது கருத்தாக இருக்கலாம்.