பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 15. இங்கே உளவியல் கருத்து ஒன்று இலைமறை காயாய். மறைந்திருப்பது புலனாகிறது. ஒரு மொழியில் நல்ல புலமை உடையவர் இன்னொரு மொழியியைக்கற்பதுஎளிது. மிதிவண்டி ஒட்டுபவர் பொறியமைந்துள்ள பெரிய வண்டியை (ஸ்கூட்டர்) ஒட்டக் கற்பது எளிது. சிற்றுந்து (சிறியகார்) ஒட்டுபவர் பேருந்து (பஸ்) சரக்குந்து (லாரி): ஆகியவற்றை எளிதில் திறமையுற்று ஒட்டலாம். தமிழ் மொழியிலோ, வேறு மொழியிலோ, பல நூல்களை ஆசிரியரிடம் பாடங்கேட்டுக் கற்றவர்கள், தாம் பாடம் கேட்காத மற்ற நூல்களைத் தாமே படித்துப் புரிந்து. கொள்ளலாம். இதற்குப் பயிற்சி மாற்றம் (Transfer of Training) 6T6ōt p] 2.6m (5T 60mj (Psychologist) @LJUj @j!ĥli? பிட்டுள்ளனர். எனவேதான், புலமையினோர் புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கத் தாம் தமிழில் நூல் இயம்புவ தாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் போலும், இந்தப் பாடலில், பொய் இல் கல்விப் புலமையினோர் என்று கூறாமல், பொய் இல் கேள்விப் புலமையினோர்' என்று கூறியிருப்பதில் உள்ள நுட்பத்தை உணரவேண்டும். வால்மீகி போன்றோரின் காலத்திலேயே இராமாயணக் கதை நிகழ்ந்ததாகக் கூறுவது ஒரு கொள்கை. ஆனால், இராமன் வரலாறு, வாய்வழிச் சொல்ல, செவிவழிக் கேட்கப்பட்டு மரபு வழி-மரபு வழியாக அறியப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் கேள்விப் புலமையினோர்’ எனப்பட்டுள்ளது. கேள்வியும் கல்வியாகும்’ என்பது திவாகர நிகண்டு நூற்பா. மொழிகளுக்கு எழுத்து கண்டுபிடித்து எழுது வதற்கு முன்பே, வாய்வழி- செவிவழிக் கல்வி வளர்ந்து. வந்தது என்பது நினைவிருக்க வேண்டும். வடமொழி. வேதம் இவ்வாறு கற்கப்படுவதை இன்றும் அறியலாம். நாகரிகம் அற்ற பகுதிகளாகக் கருதப்படும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பகுதிகளில் கல்வி இவ்வாறு கற்கப்படுவதாகக். கூறப்படுவதுண்டு. எனவே, கேள்விப் புலமையினோர்’