பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 187 விசுவாமித்திரர் அரசர் மரபினராயினும் தவம் பூண்டிருப்பதால் முதல் அந்தணன்' என்று சிறப்பிக்கப் பெற்றுள்ளார். முனிவர்கட்கெல்லாம் ஓர் அச்சு (மாதிரி முனிவர்) போல் உள்ளாராம் அவர். கடிமணப் படலம் எதிர் மாறான மங்கையர் : திருமணம் காண மிதிலை நகரப் பெண்கள் தம்மை அணி செய்து கொள்கின்றனர். அவர்களுள் சிலருடைய நிலைமைகள் கூறப்படுகின்றன. அவை : சிலர் நஞ்சனைய விழியினர்-சிலர் அமிழ்து ஒத்த மொழியினர். சிலர் நெட்டியன்ன சிவந்த இதழினர்-சிலர் நகைக்கும் வெண்முறுவலர். சிலர் முலைகள் பெரியனவா யிருப்பவர்-சிலர் இடைகள் சிறியனவாயிருப்பவர். சிலர் இளைய சிறிய அன்னங்கள் போல் நடப்பவர்-சிலர் பெரிய பெண் யானைபோல் அசைந்து அசைந்து நடப்பவர். 'விடம்நிகர் விழியாரும் அமுது எனும் மொழியாரும் கிடைபுரை இதழாரும் கிளர்நகை இனியாரும் தடமுலை பெரியாரும் தனி இடை சிறியாரும் பெடை அன நடையாரும் பிடிஎன வருவாரும் (37) இப்பாடலில் ஒருவர்க்கு ஒருவர் எதிர்மாறானவராக அதாவது-முரண்பட்டவராகக் கூறப்பட்டிருத்தலின் ஒரு வகை நயமான முரண் தொடை அமைந்துள்ளது. பரசுராமப் படலம் கரையேறலும் மூழ்கலும்: தயரதன் மணமக்களோடும் படைகளோடும் மிதிலையி லிருந்து அயோத்திக்குச் சென்று கொண்டிருந்த வழியில், அவனுடைய குலப் பகைவனாகிய பரசுராமன் வந்து