பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 191. கூறினார்: அயோத்தியில் தசரதனின் பெரிய மகனாக நானும்,அடுத்தவனாக(பரதனாக)என் ஆழியும் (சக்கரமும்) அவனுக்கு அடுத்தவனாக (இலக்குவனாக) ஆதிசேடனும், அவனுக்கு அடுத்தவனாக (சத்துருக்கனனாக) என் வளையும் (சங்கும்), மலைப் பகுதிகளில் வானரர்களாகத் தேவர்களும் பிறந்து அரக்கர்களை அழித்துக் காப்போம்என்று கூறி ஆறுதல் செய்தார்: வானுளோர் அனைவரும் வானரங் களாய்க் கானினும் வரையினும் கடி தடத்தினும் சேனையோடு அவதரித் திடுமின் சென்று என ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான்' (18). மேசரசம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் கிசரத கணைகளால் நீறு செய்ய யாம் கசரத துரக மாக் கடல் கொள் காவலன் தசரதன் மதலையாய் வருதும் தாரணி” (19). 'வளையொடு திகிரியும் வடவை தீதர விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும் இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்' (20). இவ்வாறு மேலும் இராமாயணக் கதை மாந்தர் சிலரின் பிறப்பு கூறப்பட்டுள்ளது. கையடைப் படலம் துணி உறு முனிவன்: திரிசங்கு என்பவன் உடம்புடன் சுவர்க்கம் அனுப்பும்: படி வசிட்டரை வேண்டினான். அவர் மறுத்து விட்டார். பின் விசுவாமித்திரரை வேண்டினான். இவர் ஆவன செய்யத் தொடங்கி அவனை மேலே அனுப்பினார். அதை வசிட்டர் மறுத்தார். உடனே விசுவாமித் திரர் மிகவும் துணி (சினம்) உற்று, இந்தத் தேவர் உலகம் கிடக்கட்டும்