பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19() - பால காண்டப் போது உடைகளையும் கொண்டு சென்றான்.ஏன்னும் புராண வரலாற்றுப் பூந்துணர்கள் இப்பாடலில் அறிவிக்கப் பட்டுள்ளன. திரு அவதாரப் படலம் அறுபதினாயிரம் ஆண்டு: தயரதன் வசிட்ட முனிவனிடம் கூறுகிறான்: அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து உலகைக் காத்து வந்தேன். எனக்குப்பின் இவ்வுலகை ஒம்பும் மைந்தன் பிறவாமையால் இவ்வுலகம் என்ன ஆகும் என்ற மயக்கமும் குறையும் உள்ளன: 'அறுபதி னாயிரம் ஆண்டும் மாண்டுற உறுபகை ஒடுக்கி இவ்வுலகை ஒம்பினேன் பிறிதொரு குறையிலை, என் பின் வையகம் மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டரோ' (5) ஆண்டு மாண்டுறல் = ஆண்டு கழிதல். தயரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறியுள்ளான் இந்தக் கருத்தை நம்பாமல், இதை உதிர்ந்த மலராகவே கொள்ளல் வேண்டும். மற்றும் தயரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர் என்பதும், சனகனது வில்லை அறுபதினாயிரம் மல்லர்கள் தூக்கி வந்தனர் என்பதும் நம்பமுடியாதவை.தயரதனுக்குப் பட்டத் தரசிகள் மூவரன்றி, மேலும் மனைவியர் முந்நூற்றைம் பதின்மர் இருந்ததாக வால்மீகி கூறியுள்ளார். எனவே, அறுபதினாயிரம் என்னும் எண்ணிக்கையை ஒரு புராணச் செய்தியெனக் கருதி உதிர்ந்த மலராகவே எண்ணல் வேண்டும். (என் மேல் சினம் வேண்டா). நால்வரின் பிறப்பு: அரக்கர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் திருமாலிடம் முறையிட்டார்கள். திருமால்