பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பால காண்டப் சேறணிந்த முலைத் திருமங்கை தன் வீறணிந்தவன் மேனியின் மீண்டவே' (2) வான்=முகில்.ஆர்கலி=கடல். திருமங்கை=திருமகள். வீறணிந்தவன்=திருமால். கடல் நீர் ஆவியாக மேலே செல்ல முகில் உருவாகிறது. இதைப் பண்டைப் புலவோர் முகில் கடல் நீரை முகந்து செல்வதாகவும், பருகிச் செல்வ தாகவும் கூறுவது மரபு. கம்பர் கடல் நீரை மேய்ந்து’ மீண்டது என்று கூறியிருப்பது சுவையாயுள்ளது. உயிர் உள்ள பொருள்களின் தொழிலாகிய மேய்தல்' என்பதை, உயிரற்ற முகில் செய்வதாகக் கூறியிருப்பது சமாதி அணி எனப்படும். முகில் வெளுத்திருக்கும் நிலைமைக்குச் சிவனது மேனி உவமை. -கறுத்திருக்கும் நிலைமைக்குத் திருமாலின் மேனி உவமை. மாமனும் மருமகனும்: அகன்ற இமயமலையின் உச்சி மேல் முகில் பரவிச் சென்றது, ஞாயிற்றின் வெப்பமான கதிரால் இமயம் வெப்ப மடைந்து வருந்தும் என்று கருதி, கடல் தன் நீரின் ஆவியால் முகிலாக அங்கேசென்றது என்று எண்ணும்படித் தோன்றுகிறதாம். "பம்பி மேகம் பரந்தது, பானுவால் நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின்மேல் இம்பர் வாரி எழுந்தது போன்றதே" (3). பானு = ஞாயிறு. மாதுலன் = மாமன் = மாமனார். அம்பு = தண்ணிர். வாரி = கடல். வட நாட்டு ஆறுகள் இமய மலைப் பகுதியிலிருந்து தோன்றுகின்றன. எனவே. ஆறு களுக்கு மலை தந்தையாகும். ஆறுகள் போய்க் கடலைத் தழுவுகின்றன. ஆறாகிய பெண்ணுக்குக் கடல் கணவனா கும். எனவே, கடலுக்கு மலை மாமனாராகும்; மலைக்குக் கடல் மருமகனாகும். எனவேதான், கடலாகிய மருமகன்;