பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பால காண்டப் சோணை என்னும் பெண் - என உருவக அணி இடம் பெற்றுள்ளது. 'அலமயும் மாமணி ஆரத்தோடு அகில் அளை புளின நலம்பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல் புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல், சிலம்பு அலம்பு கால் சோணையாம் தெரிவையைச் சேர்ந்தார்’ (1) புளினம்-மணல்மேடு, கால்-வாய்க்கால், தெரிவைபெண், ஐம்பூதங்களுள் விண்-நீர்-நிலம் ஆகியவற்றையும் கல்வி- கலை- மொழி- செல்வம் ஆகியவற்றையும் பெண்ணாகக் கூறுவது நமது மரபு. இந்த அடிப்படையில் சோணை ஆறு பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது. நைல் நதியை எங்கள் அப்பன் நீலன்' என்ற மாதிரியில் ஆணாகக் கூறுவது அந்த ஆற்றுப் பகுதியில் வழக்கமாம். மிதிலைக் காட்சிப் படலம் சீதையின் காதல் நோய்: தெருவில் இராமனைக் கண்ட சீதை, காதல் கொண்டு இரவில் வருந்துகிறாள். தன் மனமும் உடம்பும் தன் நூலன்ன இடையைப் போல மெலிந்து விட்டாள். கண் வழியாகப் புகுந்த காதல் நோய், குடம் பாலில் ஊற்றிய பிரை மோர், பால் அனைத்தையும் மோராக்கி விடுதல் போல், உடம்பு முழுவதும் பரவி விட்டதாம். கமாலுற வருதலும், மனமும் மெய்யும் தன் நூலுறு மருங்குல் போல் நுடங்குவாள், நெடுங் காலுறு கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறு பிரை எனப் பரந்தது எங்குமே” (41) மற்றும், தன் நோயை வெளியில் சொல்லாமல் ஊமைபோல் உள்ளத்துள்ளே கொண்டு வருந்துகிறாள். இந்நிலையில், மன்மதனும் காமத்தைத் தூண்டும் ஒருமலர்