பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 207. அம்பை அவள்மேல் எய்தான். இது, வேகும் நெருப்பில் மேலும் விறகு இட்டதுபோல் இருந்ததாம்: "நோ முறும் நோய்நிலை நுவல சிற்றிலள் ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனன் வேம்எரி அதனிடை விறகு இட்டென்னவே' (42) மன்மதன் எய்தது ஓர் அம்புதான். அதுவே சீதையின் கருத்தைக் கலங்கச் செய்ததாம். பனிக் காற்றுக்கு உருக் குலைந்த தாமரைத் தடாகம் போலவும், கிரகண காலத்தில் பாம்பு விழுங்கிய திங்கள் போலவும், சீதை சோர்ந்து மலர்ப் படுக்கையில் கிடந்தாள் 'நாளறா நறுமலர் அமளி நண்ணினாள் பூளைவீ புரை பனிப் புயற்குத் தேம்பிய தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும் வாள் அரா நுங்கிய மதியும் போலவே' (47). பனிக்குத் தாமரை குலையும்; ஞாயிறு தோன்றிய பின்-பனி மறைந்த பின் தாமரை செழித்துத் தோன்றும்என்பது இதனால் புலப்படும். பாம்பால் விழுங்கப்பட்ட திங்கள் என்பது திங்கள் போன்ற முகத்தைப் படுக்கையில் கவிழ்த்துப் புதைத்துக் கொண்டாள் என்பதை அறிவிக் கிறது. முகத்தை விழுங்கிய பாம்பு கூந்தல்தான். அக்தி மாலைக் காலன்: ஓரளவு செந்நிறமும்-கருநிறமும் கொண்ட மாலை வந்தது இந்த அந்தி மாலை எமனாக உருவகிக்கப்படு கிறது. எமன் உடல் கறுப்பு-தலைமுடி சிவப்பு. அவன் உயிரைப் பிடிக்க வீசும் பாசக்கயிறாகத் தென்றல் உருவகிக்கப்பட் டுள்ளது: "விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும் எரிகிறச் செக்கரும் இருளும் காட்டலால்