பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பால காண்டப் என்பது யாடல் பகுதி. மற்றும், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் அகப்படுத்தப்பட்ட யானைக் கண் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, குழியிலிருந்து திறமையாக மீண்ட யானை போல்,சூழ்ச்சித் திறமையுடன் தப்பியசெய்தி புறநானூற்றுப் பாடல் ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது : 'கீடுகுழி யகப்பட்ட பீடுடைய எறுழ் முன்பின் கோடு முற்றிய கொல் களிறு நிலை கலங்கக் குழி கொன்று கிளைபுகலத் தலைக் கூடி யாங்கு, நீ பட்ட வரு முன்பின் பெருங் தளர்ச்சி பலர் உவப்பப் பிறிது சென்று மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக் கூறலின்' (17:15–23) என்பது பாடல் பகுதி. இத்தகைய வரலாறுகளைக் கம்பர் முன் கூட்டி அறிந்தவ ராதலின், பகையினை வெல்லும் உணர்வினன் சூழ்ச்சியே போல, வேரொடும் கொடு நடந்தது ஓர் வேழம்' என்று பாடியுள்ளார் போலும். கண்ணுதலும் கண்ணனும் : கரிய யானை தரையில் விழுந்து ஒரு பக்கம் வெண்ணிறப் புழுதி படிந்து வருவது, சிவன் ஒருபக்கம் பொருந்த வருகின்ற கண்ணனைப் போல் உள்ள தாம் : ‘மண்ணுற விழுந்து நெடுவானுற எழுந்து கண்ணுதல் பொருந்த வரு கண்ணனில் வரும் கார் உண்ணிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் வெண்ணிற நறும்பொடி புனைந்த மதவேழம்' (19) வெண்ணிறப் புழுதியில் விழுந்து புரண்ட கரு. நிறயானை, ஒருபக்கத்தில் உள்ள புழுதியை மட்டும் உதறி