பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 217 விட்டதால், ஒரு பக்கம் கரு நிறமாகவும், மற்றொரு புறம் வெண்ணிறமாகவும் உள்ளதாம். இந்தத் தோற்றம், வெண்ணிறு அணிந்த சிவனை வலப் பாகத்தில் கொண்டுள்ள கரு நிறத் திருமாலை ஒத்திருந்ததாம். கண்ணுதல் = சிவன். கண்ணன் = திருமால். திவ்வியப் பிரபந்தத்தில், திருமாலின் வலப்புறம் சிவன் இருப்பதான செய்தி கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரின் திருவாய் மொழியில், 'வலத்தனன் திரிபுரம் எரித்தவன், இடம்பெற... உலகமும் தானும் புலப்பட...' (1-3-9) (திரிபுரம் எரித்தவன் = சிவன்)

  • தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்

- துறையும் உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே' - (4-8-10) (சடைமுடியன் - சிவன்) எனக் கூறப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. சிவனது இடப் பக்கத்தில் உமாதேவி இருப்பதாகச் சைவர் கூறுவதும் ஈண்டு எண்ணத் தக்கது. ஆங்கிலத்தில் ஆல் ரவுண்ட் மாஸ்டர் (Ali Round Master) எனப் பல துறையிலும் வல்லுநரைக் குறிப்பிடுவார் கள்.கம்பர் அத்தகையவர் போலும்! ஆறும் வள்ளலும்: மூவரும் காட்டில் சென்று கொண்டிருந்த போது, இடை விடையே சில ஆறுகளைக் கண்டனர்; சில ஆறுகள் வெள்ள மாக நீர் பெருகாவிடினும், தம்மிடம் மக்களால் தோண்டப் பட்ட ஊற்றுக் குழிகளின் வாயிலாக நீர் உதவுவதை நோக்கினர். இந்தக் காட்சி வள்ளல்கள் தம்மிடம் உள்ள பெருஞ்செல்வம் தீர்ந்து விடினும் எங்ங்னமாவது