பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பால காண்டப் வீச வீச வெதும்பினள் மென்முலை ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாங்கொலோ' (80) முதலில் சீதை பற்றிய செய்தியைக் கூறி, அதிலிருந்து 'ஆசை நோய்க்கு மருந்து இல்லை என்ற பொது உண்மை கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் இறுதி அடி வேற்றுப் பொருள் வைப்பாகும். சந்திர சயிலப் படலம் மேலவரும் சிறியவரும் : தயரதன் படைகளுடன் திருமணம் காண மிதிலைக்குச் செல்கிறான். பொன்னாலான தேர் உருளைகள், கரிய பாறைக் கற்கள் மேல் ஒடும்போது, அந்தக் கற்களின் மேல் உரைத்துக் கருமையைப் பொன்னிறமாக்கி ஓடினவாம். இதனால் அறிவது: பெரியோர் தாழ்ந்தவரைச் சேர்ந் தாலும் அவர்களையும் அறிவுரை கூறித் திருத்தி உயர்ந்தோராக்குவர் என்பது: தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே உருண்ட வாய்தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி இருண்ட கல்லையும் தன் கிறம் ஆக்கிய இரதம்' (8) இப்பாடலில் முன் இரண்டடி-அதாவது, மேலவர் சிறியவர்ச் சேரினும் மாற்றுவர் என்பது வேற்றுப் பொருள் வைப்பாகும். பூக்கொய் படலம் குயில்களின் நாணம் : பெண்களின் ஆரவாரத்தைக் கேட்டு, வழியில் உள்ள சோலைக் குயில்கள் கூவவில்லை. அவர்களின் இனிய ஒலி போல் வாய் திறந்து ஒலி எழுப்ப முடியாமைக்கு நாணின.