பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பால காண்டம் உண்டாட்டுப் படலம் அருமறைக்கு ஆகாதவர்: மிதிலை செல்பவர்கள் வழியில் உண்டாட்டு புரிகின்றனர். கூடாரத்தில் உடலுறவு கொள்பவர் உடையை முற்றிலும் களைந்து விட்டு உறவு கொள்கின்றனராம். அனைவரும் அறியும்படி பறை அடிப்பது போன்ற தன்மை உடையவர்கள் மறைவாகச் செய்யவேண்டியதை மறைவாகச் செய்வார்களா? (மாட்டார்கள்) 'கறைகமழ் அலங்கல் மாலை களிர்நறுங் குஞ்சி மைந்தர் துறையறி கலவிச் செவ்வித் தோகையர் தூசு வீசி நிறையகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் அறையறை அனைய நீரார் அருமறைக்கு ஆவரோதான்' (56) குஞ்சி=தலைமுடி. அக்காலத்தில் ஆடவரும் பெண்டிர் போல் தலையில் முடிவைத்திருந்தனர். துறை அறி கலவி என்பது, புணர்ச்சி விதியைக் குறிக்கிறது. தூசு = உடை. மறை= மறைவு. பறை அடிப்பது அனைவருக்கும் செய்தி அறிவிப்பதற். காக அன்றோ? இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இத்தகையோர் புணர்ச்சியின் போதும் ஒளிவு மறைவு இன்றி நடந்து கொள்வர். அதாவது- உலகில் மக்கள் புணர்ச்சியின் போது உடையை அறவே நீக்கி விடுவதில்லை. ஆனால், பறை அனைய அற்பர்கள் உடையை முற்றிலும் நீக்கி விடுகிறார்களாம். இந்தப் பாடலை மட்டமாக எண்ணிவிடக் கூடாது. பெண்களை அம்மணமாக (நிர்வாணமாக) நடனம் டவிட்டுப் பொருள் ஈட்டுபவர்க்கும், அரை அம்மணத் தோடு படங்களிலும் காட்சிகளிலும் பெண்களின் உருவை அமைத்துக்காட்டிப் பொருள் ஈட்டுபவர்க்கும், கம்பர்