பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பால காண்டப் குலத்து இராமன். காலையில் இயற்கையாக ஞாயிறு தோன்ற, மணம்காண வந்ததாகக் கூறியிருப்பது தற்குறிப் பேற்றம். துரதுவர் : இராமன் மணக்கோலம் கொள்கிறான். இரு செவிகளி லும் குண்டலங்கள் அணிகிறான். இவை பகலில் சீதை படும் காதல் வேதனையை ஞாயிறும், இரவில் சீதை படும் துயரைத் திங்களும் இராமனின் காதுகளில் மறைவாக (இரகசியமாக) அறிவிக்கத் தூது வந்தனபோல, இராமனின் காதுகளில் அணிவிக்கப்பட்டன. 'ஏதுமில் இருகுழை இரவு நன்பகல் காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுறத் தூது வந்து உரைப்பன போன்று தோன்றவே' (52) வட்டமான இரு குண்டலங்களும் ஞாயிறும் திங்களும் போல் உள்ளன. இரண்டில் ஒன்று ஞாயிறு போன்றது; மற்றொன்று திங்கள் போன்றது. இராமன், ஞாயிறு குலத்தவனாதலின் தூது சொல்ல ஞாயிறு அக்கறை கொண்டது. சீதை திங்கள் குலத்தவளாதலின் அவளது நிலையைத் தூதாக இராமனுக்குச் சொல்லத் திங்கள் அக்கறை எடுத்துக்கொண்டது என்பது கருத்து. உண்மை .யில் ஞாயிறும் திங்களும் தூது வரவில்லை: அவை தூது வந்தாற்போல் சொல்லியிருப்பது தற்குறிப்பேற்றம். இவ்வாறு பாலகாண்டத்தில் தற்குறிப்பேற்ற அணி இடம்பெற்றுக் கற்பதற்குக் களிப்பு தருகிறது.